selva-raghavan-tweet-about-first-love
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தனித்துவமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பாகாசூரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் செல்வதாகவன் அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அனுபவத்தில் கற்றுக்கொண்ட சில விஷயங்களை மோட்டிவேஷனலாக எடுத்துரைத்து ட்விட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது, “அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ.. நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது. அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை” என்று முதல் காதல் குறித்து உருக்கமான பதிவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…
அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர்…
மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில்…