ParrisJeyaraj
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாக உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ஏ 1 என்ற திரைப்படம் ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஜான்சன் என்பவர் இயக்கியிருந்தார்.
தற்போது இவர்கள் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது. காமெடிக்கு பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ‘பாரிஸ் ஜெயராஜ்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இணையத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையவாசிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்தப் படத்தில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். ‘ஏ1’ படத்துக்குத் தன் பாடல்களால் மெருகூட்டிய சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் பணிபுரிந்துள்ளார். ஜனவரி மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…