Santhanam has confirmed that he will compete with Vijay Sethupathi
நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘டிக்கிலோனா’. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாவது இதுவே முதன்முறை.
அன்றைய தினம் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படமும் வெளியிடப்பட உள்ளது. இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி, சந்தானம் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது இதுவே முதன்முறை.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…
தவெக தலைவர் விஜய் நாளை தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், இயக்குநரும் நடிகருமான சேரன் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை…
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான “காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோ, ரசிகர்கள் மத்தியில்…
தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் எடிட்டிங் பணிகள் முழுமையாக…
“விலங்கு” மற்றும் “மாமன்” படங்களின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், நடிகராக அறிமுகமாகும் புதிய வெப் தொடரான “வாரண்ட்” வரும் மே…
29 Official Trailer | Vidhu, Preethi Asrani | Sean Roldan | Rathna Kumar | Kaarthikeyan…