sanam shetty and darshan issue
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகர் தர்ஷன். தர்ஷனுக்கு எதிராக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பல லட்சம் ரூபாய் தர்ஷன் மோசடி செய்தார். பின்னர் திருமணம் செய்ய மறுத்ததோடு, சமூக வலைத்தளங்களில் தன்னையும், தன் குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து, இழிவுபடுத்தியதாகவும் கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தர்ஷன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே, தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஒரு வாரத்துக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்பின்னர், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
முத்து எடுத்த முடிவால்மீனா பயத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த…
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…