“எங்களுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் கேப்டன்”: சமுத்திரகனி இரங்கல்

90-களிம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். ‘கேப்டன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகராக மட்டுமல்லாமல் மனிதநேயம் மிக்கவராகவும் இருந்தார். மக்கள் பலருக்கு தன்னால் இயன்ற பல உதவிகளை செய்தார். இவர் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தார். நடிகர் விஜயகாந்த் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும், இயக்குனருமான சமுத்திகனி நடிகர் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், \”உங்கள் மனதிற்காக தான் ‘நெறஞ்ச மனசு’ என்று தலைப்பு வைத்தேன். அந்த 72 நாட்கள் உங்களோடு இருந்தது, ஒரு மாபெரும் சக்தியோடு இருந்த மாதிரி இருக்கிறது. அந்த நாட்கள் இன்றும் பசுமையாக என் மனதில் இருக்கிறது. இன்று நீங்கள் இல்லை என்று சொல்கிறார்கள். என் மனது நம்ப மறுக்கிறார். என்னுடைய கேப்டன் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருப்பார். அவர் ஆத்மா சாந்தியடைய நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். எங்களுக்குள் நீங்கள் இருக்கிறீர்கள் கேப்டன். உங்கள் நல் எண்ணமும் இந்த சமூகத்தின் மீது நீங்கள் வைத்த பார்வையும் எனக்கு தெரியும். அதை நாங்களும் முன்னெடுக்கிறோம் கேப்டன். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது கேப்டன்\” என்று பேசினார்.

samuthirakani latest post-goes-viral
jothika lakshu

Recent Posts

கேரளா ஸ்டோரி 2 வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை

கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…

12 hours ago

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம்

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…

12 hours ago

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…

12 hours ago

‘அரசன்’ அப்டேட் கொடுத்த சமுத்திரகனி!

'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…

12 hours ago

‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!

'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…

2 days ago