Sameera Reddy tests positive for Covid-19
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நேற்று எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருக்குறீர்கள் என்பதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே ஆலியா பட், அமீர் கான், கோவிந்தா, அக்ஷய் குமார், கேத்ரீனா கைஃப், சோனு சூட் உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த வாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்த வரிசையில் தற்போது சமீரா ரெட்டியும் இணைந்துள்ளார்.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…