விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்ட சமந்தா.. வைரலாகும் புகைப்படம்

நாக சைதன்யா – சமந்தா திருமண பிரிவுக்கு பிறகு நாக சைதன்யாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பலமொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்துக்கொண்டார்.

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நாகசைதன்யா என்ற தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண உறவு 4 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில் திடீரென தனது கணவரை பிரிந்தார். அதன் பின்னர் இவர் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடிப்பதில் முழுகவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் நாக சைதன்யாவும், சமந்தாவும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை ’ஓ பேபி’ படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாகின. இந்நிலையில் விவாகரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் நாக சைதன்யாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 2019-ஆம் ஆண்டு நாக சைதன்யா சமந்தா இருவரும் இணைந்து நடித்து வெளியான மஜிலி என்ற படத்தின் 3 ஆண்டு நிறைவு செய்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Samantha shared a photo of Naga Chaitanya
jothika lakshu

Recent Posts

என் மீது பழி போடாதீர்கள்.. இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…

13 hours ago

விஜய் குறித்து கேட்ட கேள்வி, கருணாஸ் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…

13 hours ago

பகவதி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட இயக்குனர் வெங்கடேஷ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

14 hours ago

ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை

ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…

19 hours ago

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை ‘சுயம்பு’ வெளியீடு

1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…

19 hours ago

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்?

தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…

19 hours ago