Samantha movie is a remake in Hindi
தமிழில் வெற்றி பெற்ற படங்களுக்கு தற்போது இந்தியில் மவுசு அதிகரித்துள்ளது. அதன்படி மாஸ்டர், கைதி, விக்ரம் வேதா, அந்நியன், மாநகரம், கோலமாவு கோகிலா, ஜிகர்தண்டா, துருவங்கள் பதினாறு, ஆரண்ய காண்டம் ஆகிய படங்கள் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில், நடிகை சமந்தா நடித்துள்ள ‘யூ டர்ன்’ படமும் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது.
யூ டர்ன் படம் தமிழ், தெலுங்கில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தாவின் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்தன. இதன் இந்தி ரீமேக்கில் சமந்தா கதாபாத்திரத்தில் நடிகை அலயா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் இயக்குனர் மற்றும் இதர நடிகர், நடிகை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor