samantha-expressed-her-gratitude-to-the-fans
தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர்தான் சமந்தா. இவரது நடிப்பில் நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் யசோதா திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மணி சர்மா இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களுக்கான பேனர்களுக்கு மட்டுமே பால் அபிஷேகம் செய்து கொண்டாடி வந்த ரசிகர்கள் தற்போது யசோதா திரைப்படத்தை கொண்டாடும் வகையில் சமந்தாவின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்துள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. அதனை நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு தனது நன்றியை நெகிழ்ச்சியுடன் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…