மலையாள திரையுலகம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இளம் நடிகை சாய் பல்லவி.
ஆம் நிவின் பாலி நடித்து வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்த படம் பிரேமம்.
இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனம் கவந்தவர் நம் தமிழ் பெண் நடிகை சாய் பல்லவி
ஆனால் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து மாரி 2, என்.ஜி.கே என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.
மேலும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகில் கூட மிகவும் பிரபலமான ஒரு நடிகை சாய் பல்லவி.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார் சாய் பல்லவி.
இதில் இவர் பேசியது : நான் ஒரு நடிகையாக சினிமா துறையில் திருப்தியாக இருக்கிறேன். எனக்கு பெரிய ஹீரோயினாக ஆகி சாதிக்க வேண்டும் என்று எண்ணம் கிடையாது.
என்னை பார்ப்பவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக பார்க்கிறார்கள். நான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நான் ஒரு முறைக்கு பல முறை யோசித்து பார்த்து தான் முடிவு எடுகிறேன்.
எந்த நிலையிலும் கண்டிப்பாக அரைகுறை உடை அணிந்து நடிக்க மாட்டேன். என்னால் அரைகுறை ஆடையில் நடிக்க முடியாது. 20 வருடங்களுக்கு பிறகு எனது குழந்தைகள் நான் நடித்த படங்களை பார்த்தாலும் அதை பார்த்து சந்தோஷப்படுகிற மாதிரி இருக்க வேண்டும்.
மேலும் எனது அப்பா, அம்மா, சிநேகிதிகள் என் படத்தை பார்த்தாலும் பெருமைப்படவேண்டும். அப்படிப்பட்ட கதைகளில்தான் நடிக்க சம்மதிக்கிறேன் என கூறினார் நடிகை சாய் பல்லவி.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…