சாய் பல்லவி நடிக்க போகும் புதிய படத்தின் அறிவிப்பு இதோ

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் ‘மாரி 2’, ‘என்.ஜி.கே’, ‘கார்க்கி’ என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சாய் பல்லவி நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ‘கார்த்திகேயா’, ‘கார்த்திகேயா 2’ போன்ற படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை நடிகை சாய் பல்லவி தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். சாய் பல்லவி இதற்கு முன்பு நாக சைதன்யாவுடன் ‘லவ் ஸ்டோரி’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

jothika lakshu

Recent Posts

தலைவர் 173 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

2 hours ago

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

2 hours ago

மங்காத்தா மற்றும் கோர்ட் படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? பிரேம்ஜியின் பதிலால் அதிரிய அரங்கம்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…

2 hours ago

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள்.. பயத்தில் நடுங்கிய ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

3 hours ago

விஜயா கேட்ட கேள்வி, வக்கீல் கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

3 hours ago

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

24 hours ago