Saayam Movie Review
ஆன்டனி சாமி இயக்கம் மற்றும் தயாரிப்பில் அபி சரவணன், பொன்வண்ணன் இளவரசன் என பலரது நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் சாயம். பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து அவற்றையெல்லாம் தாண்டி இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.
ஒரு சாதாரண பிரச்சனையை ஜாதி வெறியர்கள் எப்படி அதனை ஜாதிப் பிரச்சனையாக மாற்றுகிறார்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
அதாவது படத்தில் ஒரு பெரிய மனுஷனாக இருக்கும் பொன்வண்ணனும் ஆசிரியராக பணியாற்றிவரும் இளவரசனின் சேர்ந்து ஊருக்காக நல்ல விஷயங்களை செல்கின்றனர். இவர்களைப் போலவே இவர்களது மகன்கள் கல்லூரியில் ஒன்றாக படித்து வருகின்றனர். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில் ஜாதி வெறியர்கள் இவர்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தி விடுகின்றனர். இருவருக்கும் ஏற்படும் மோதலில் ஒருவர் கொல்லப்படுகிறான். அதன் பிறகு நடந்தது என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
படத்தில் நாயகனாக நடித்துள்ள அபி சரவணன் ஆரம்பத்தில் சாதுவானவராகவும் பிறகு தாதாவாகவும் மிரட்டியுள்ளார்.
படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பொன்வண்ணன் இலவரசன் என இருவரும் தங்களது தனித்தனியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஜாதியை வைத்து இழிவுபடுத்தும் அவர்களுக்கு தன்னுடைய வார்த்தையால் பதிலடி கொடுக்கும் காட்சியில் அசத்தியுள்ளார் இளவரசன்.
படத்தில் நடித்துள்ள மற்ற கதாபாத்திரங்களும் பாராட்டும் வகையில் நடிப்பை கொடுத்துள்ளனர். படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆண்டனி சாமி இந்த படத்தில் நடிகராகவும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். அனைத்து விதத்திலும் அவருடைய பணியை சிறப்பாக செயலாற்றி உள்ளார்.
நாகா உதயன் இசை படத்திற்கு பலம் சேர்க்க கிரிஸ்டோபர் சலீமின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…