நிக்கி கல்ராணியிடம் ரூ.50 லட்சம் மோசடி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நிக்கி கல்ராணி. இவரது சகோதரி சஞ்சனா கல்ராணி. இவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை நிக்கி கல்ராணியின் குடும்பத்தினர் பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரு அம்ருதஹள்ளி போலீஸ் நிலையத்தில் நடிகை நிக்கி கல்ராணி ஓட்டல் உரிமையாளர் ஒருவர் மீது ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ‘‘கோரமங்களா பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் நிகில். இவருடைய ஓட்டலில் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.50 லட்சம் முதலீடு செய்திருந்தேன். இதற்காக மாதம் ரூ.1 லட்சம் கொடுப்பதாக நிகில் கூறியிருந்தார். ஆனால் இதுவரை நிகில் எனக்கு மாதம் ரூ.1 லட்சம் கொடுக்கவில்லை. மாறாக என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தையும் திரும்ப கொடுக்கவில்லை.

இதுபற்றி பலமுறை நிகிலிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. என்னிடம் வாங்கிய ரூ.50 லட்சத்தை திரும்ப கொடுக்காமல் நிகில் மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று நடிகை நிக்கி கல்ராணி கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Suresh

Recent Posts

Vaane Vaane Lyrical Video

Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…

22 hours ago

Kalangathey Lyrical Video

Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash

22 hours ago

She is My Chellakutty Lyric Video

She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam…

22 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் ‘சின்ன மருமகள்’ ஸ்வேதா ஷாப்பிங் – குவிந்துள்ள கலக்கல் கலெக்‌ஷன்கள்!

விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும்…

22 hours ago

வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் ஷாப்பிங் – குறைந்த விலையில் குவிந்துள்ள அசத்தல் கலெக்‌ஷன்கள்!

சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…

22 hours ago

சினிமா மீதான தீராத காதல்… மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் யுவா புஷ்பாகர்!

வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில்…

23 hours ago