Categories: Health

கருமை நிறத்தை போக்கி சருமத்தை பராமரிக்க உதவும் ரோஸ் வாட்டர்!

தேவையான பொருட்கள்: ரோஜா பூக்கள் – 50, தண்ணீர் – 2 லிட்டர். செய்முறை: ரோஸ் வாட்டர் செய்ய தேர்ந்தெடுக்கும் ரோஜாப்பூ நாட்டு ரோஜாப்பூவாகவும், பிங்க் நிறப்பூவாகவும் இருக்க வேண்டியது அவசியம். முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.

பின்னர் அதில் ரோஜா இதழ்களை போட்டு 20 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து, தேவைப்பட்டால் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு விட்டு பிறகு எடுத்து வடிகட்டி ஆற வைக்க வேண்டும். ஆறியவுடன் அந்த நீரை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

ரோஸ் வாட்டர் சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்க உதவும். மேலும் ரோஸ் வாட்டர் சருமத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கி சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

ரோஸ் வாட்டர் பல அருமையான பலன்களை நம் சருமத்திற்கு தருகிறது. சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சுருக்கங்களை போக்கும். மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி தரும்.

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவலாம். பின் முல்தானி மிட்டி கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால் முகம் பிரகாசிக்கும்.

இரண்டு ஸ்பூன் கடலை மாவு, ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து கழுவினால் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்துவிடும்.

முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால் சந்தனப் பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி மாஸ்க் போட்டு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் முகத்தின் அழகைக் கெடுக்கும் பருக்கள் நீங்கிவிடும்.

admin

Recent Posts

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

13 minutes ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

17 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

17 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

17 hours ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

17 hours ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago