RK Suresh replaces Vijay Sethupathi in Bala
மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே அதன் தமிழில் ரீமேக்கான விசித்திரனையும் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹீரோயினாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், முதலில் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலனையில் இருந்ததாகவும், இயக்குனர் பாலா தான் தன்னை பரிந்துரைத்ததாகவும் அவர் கூறி உள்ளார். மேலும் இப்படத்தின் வெளியீடு தியேட்டரிலா அல்லது ஓடிடியிலா என்பதை தயாரிப்பாளர் பாலா தான் முடிவு செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான…
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில்…
இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி…
தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா…
1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…