retta thala movie review
கதாநாயகன் காளி (அருண் விஜய்) மற்றும் கதாநாயகி ஆந்த்ரே (சித்தி இத்நானி) ஆகிய இருவரும் அனாதை. இருவரும் சிறு வயதில் எதிர்ச்சியாக சந்திக்கின்றனர். இருவரும் அனாதை என தெரிய வந்ததும் இருவரும் அவர்களுக்குள் ஆறுதலாக பேசி கொள்கிறார்கள். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. காதலித்த சில மாதங்களில் வேலை காரணமாக வெளியூருக்குச் சென்ற காளி ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு காதலி ஆந்த்ரேவைச் சந்திக்க வருகிறார். ஆனால், பணத்தின் மீது அதீத ஆசை கொண்டிருக்கும் ஆந்த்ரே உன்னிடம் பணம் இருந்தால் மட்டுமே நம் காதல் சேரும் எனக் கூறி தடை போட்டுவிடுகிறார்.
இதனையடுத்து அருண் விஜய் அங்கிருந்து செல்கிறார். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது மயங்கி நிலையில் தன்னைப் போலவே உருவம் கொண்ட உபேந்திராவைச் சந்திக்கிறார் காளி. இருவரும் உபேந்திராவின் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு காளியையும் தன்னை போல ஸ்டைலாக மாற்றுகிறார். இருவரும் நண்பர்களாகின்றனர். பின்னர் ஒருநாள் என்னை போல் வெளியே சென்று வாழ்ந்து பாரு என உபந்தேர் கூறினார். உடனே காளி தனது காதலியை சந்திக்கிறார். இந்த விஷயம் காதலிக்கு தெரிய வருகிறது. பெரிய பணக்காரராக இருக்கும் அவரைக் கொன்றுவிட்டு, அவருடைய அடையாளத்தை வைத்து செல்வத்தை அனுபவிக்கலாம் என காளியும், ஆந்த்ரேவும் திட்டமிடுகிறார்கள்.
உபேந்திராவைக் கொலை செய்த பிறகு காளிக்கு எப்படியான பிரச்னைகள் வருகின்றன. இறுதியில் இருவரும் வசதியாக வாழ்ந்தார்களா? இணைந்தார்களா என்பது தான் மீதி கதை.
அருண் விஜய் இந்த மாதிரி ரோல் எல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல், ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் அடி தூள் கிளப்புகிறார். கதாநாயகி சித்திக்கு நல்ல கதாபாத்திரம் என்றாலும், என்னமோ அவரை இந்தளவிற்கு சாடிஸ்ட் வில்லிதனமான கேரக்டரில் செட் ஆகவில்லை. பழிவாங்கும் எண்ணம் கொண்டு துரத்தும் வழக்கமான வில்லன்களாக இந்த யுத்தக்களத்தில் பங்குபெறும் ஹரீஷ் பேரடி, யோகேஷ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோருக்கு அழுத்தமான காட்சிகள் இல்லை.
இரட்டை வேடம், கதாநாயகியின் ஆசை, எதற்கும் துணிந்து களத்தில் இறங்கி துப்பாக்கி முனையில் சிக்கிக்கொள்ளும் நாயகன் எனச் சுவாரஸ்யமான ஒன் லைனைப் பிடித்து நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன்.
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு சூப்பராகவே உள்ளது. சாம் சி எஸ் பின்னணி இசை மிரட்டல், படத்தின் காட்சியை நல்ல எலிவேட் செய்துள்ளது.
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…
சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…
அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…