Release Date of Beast Movie Teaser Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் உட்பட எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த டீசரை ஏப்ரல் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் ஒரு பக்கம் உற்சாகமடைந்து இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏப்ரல் ஃபூல் செய்ய நெல்சன் திட்டம் போடுகிறாரா? அவரு குசும்புக்கார ஆளாச்சே எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…
பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…
இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…
'பாகுபலி' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' படங்களின் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது நடிகர்…
நடிகர் அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து, அவரது 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்…