மூணார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்களின் பிள்ளைகளுக்கு கேரள கல்லூரியில் வளாகத்தில் நடக்கும் அவலநிலையை பற்றிய கதை.

படத்தின் கதை 80களில் துவங்குகிறது. மூணார் நெற்றிக்குடியில் வசிக்கும் இளைஞன் கதிர் (ஜி வி பிரகாஷ் குமார்). அவரது குடும்பம் அங்கிருக்கும் எஸ்டேட்டை நம்பியும் சிறு சிறு தொழில்களை நம்பியே பிழைத்திருக்கிறது. அது போன்று பல குடும்பங்கள் இதே வறுமை பின்னணியில் வாழ்கிறது. அவர்களின் வாழ்வை மாற்றும் ஒரே நம்பிக்கையாக இருப்பது கல்விதான். வறுமையின் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு பாலக்காடு சித்தூர் கல்லூரியில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ரிசர்வேஷன் கோட்டாவில் சில தமிழ் மாணவர்களும், ஜி வி பிரகாஷ் குமாரும் அவரது நண்பரும் சேருகின்றனர்.அங்கு கேரள மாணவர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகின்றனர்.

அந்த கல்லூரியில் இரண்டு கேரள மாணவ சங்கங்கள் இருக்கிறது. அச்சங்கங்கள் வைக்கும் சட்டம் தான் கல்லூரியை ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கிறது. இவர்களால் அக்கல்லூரியில் படிக்கும் பிற தமிழ் மாணவர்களுக்கு பிரச்சனையும், வலிகளும் மட்டுமே மிச்சம். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களை ஜி வி பிரகாஷ் குமார் எதிர்த்து போட்டியிடுகிறார்.இறுதியில் இந்த போராட்டத்தில் ஜி.வி.பிரகாஷ் வென்றாரா? இல்லையா? என்பதே மீதி கதை.

இயக்குனர் நிகேஷ் அவர் பார்த்த உண்மை சம்பவத்தை அடிப்படையில் இப்படத்தை இயக்கி இருக்கிறார். அவர் எடுத்துக் கொண்ட கதைக்களம் சிறப்பாக இருந்தாலும். திரைக்கதை அவ்வளவு வலுவாக இல்லை. இரண்டாம் பாதியில் கல்லூரி எலக்‌ஷன் காட்சிகளை மட்டுமே வைத்து கதை நகர்கிறது. அது பார்வையாளர்களுக்கு சலிப்பை தட்டுகிறது.

ஜி வி பிரகாஷ் குமார் கல்லூரி மாணவனாக சிறப்பாக நடித்துள்ளார். மமிதா பைஜூ வழக்கம் போல தமிழ் சினிமாவின் கதாநாயகிகள் போல் படத்தில் முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறார். மமிதா பைஜூவின் திறனை இப்படத்தில் சரியாக இயக்குனர் பயன்படுத்தவில்லை. வெங்கடேஷ் மற்றும் ஷாலு ரஹீம் கல்லூரியில் இருக்கும் முரட்டு சீனியர்களாக போதுமானளவு நடித்து இருக்கின்றனர்.

அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். படத்தின் மாஸ் காட்சிகள், சண்டைக்காட்சிகளை கச்சிதமாகக் படம்பிடித்து காண்பித்து இருக்கிறார்.

ஜிவி பிரகாஷ், சித்துகுமார் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை பெரிதாக கவரவில்லை.

ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.”,

Rebel Movie Review
jothika lakshu

Recent Posts

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

10 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

10 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

18 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

18 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

18 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

18 hours ago