Ready to act glamorous - Actress Surabhi
தமிழில் விக்ரம்பிரபு ஜோடியாக ‘இவன் வேறமாதிரி’ படத்தில் அறிமுகமான நடிகை சுரபி, தொடர்ந்து தனுசுடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் ஜெய்யுடன் புகழ் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இருப்பினும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே பட வாய்ப்புகளை பிடிக்க அரைகுறை ஆடையில் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் சுரபி.
இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறும்போது, “நான் படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். குறும்புத்தனம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை உள்ளோரை எனக்கு பிடிக்கும். எனக்கு யார் மீது காதல் வருகிறதோ அவரை திருமணம் செய்து கொள்வேன்.
சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்” என்றார். நடிகை சுரபி தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அடங்காதே என்ற தமிழ் படத்திலும் 3 தெலுங்கு படங்களிலும், ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…