Re-release of 'Billa' - Ajith fans excited
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ‘பில்லா’வும் ஒன்று. கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். இது ரஜினியின் பில்லா பட ரீமேக்காக இருந்தாலும், அஜித்தின் நடிப்பும், படத்தை ஸ்டைலிஷாக எடுத்திருந்த விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து பில்லா 2-ம் பாகமும் எடுக்கப்பட்டது. ஆனால் இது முதல் பாகம் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், பில்லா படத்தை வருகிற மார்ச் 12-ந் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions
Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…
1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…