தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ள இப்படத்திற்கு மேயாத மான் படத்தின் இயக்குனரான ரத்னகுமார் திரைக்கதை அமைத்துள்ளார்.
ரத்னகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் படத்தைப் பற்றிய தகவல்களை கூறியுள்ளார். அதாவது முதல் மூன்று நாளில் விஜய்க்கு வேலை இல்லை டயலாக் இல்லை. இதனால் அவர் சமைப்பது பாட்டு கேட்பது விளையாடுவது என இருந்து வந்தார்.
விஜய் சேதுபதி இந்த படத்தில் வந்த பிறகுதான் சிறுசிறு காட்சிகள் கூட ஜாலியாக மாறியது. எதை விடுவது, எதை வெட்டுவது என தெரியாமல் இருந்தோம். படத்தின் நீளத்தை குறைப்பதற்காக சில காட்சிகளை மனமில்லாமல் வெட்ட வேண்டியதாயிற்று எனக் கூறியுள்ளார்.
இன்னும் பத்து நாட்கள் மட்டும் நேரம் கிடைத்திருந்தால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடந்து முடிந்து சென்சாருக்கு அனுப்பி வைத்திருப்போம்.
ஆனால் அதற்குள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்தும் கெட்டு விட்டது. இருந்தாலும் இப்படம் எப்போது வெளியானாலும் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
இதுவரை எந்த படத்திலும் பார்க்காத விஜயை இப்படத்தில் பார்க்கலாம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…