Rashmika Mandanna praises famous cricketer
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா ‘கிரிக்பார்டி, படத்தின் மூலம் புகழ் பெற்றார். சிறப்பான நடிப்பு மற்றும் அழகான சிரிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அவர், சமூகவலைதளங்களிலும் எப்போதும் தீவிரமாக இருக்கிறார்.
கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் கொண்ட அவர் அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், விராட் கோலி தலைமையிலான பெங்களூரூ ராயல்சேலஞ்சர்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்தார். தன்னுடயை பதிவுகளிலும் ராயல்சேலஞ்சர்ஸ் அணியையும், வீரர்களின் விளையாட்டையும் புகழ்ந்து தள்ளி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கே ‘ஐ.பி.எல் கோப்பை’ எனக் கூறி ஐ.பி.எல் கிரிக்கெட் ரசிகர்கள் வட்டாரத்தில் புயலைக் கிளப்பினார். அவருடைய ஒவ்வொரு பதிவையும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். அண்மையில் திடீரென இன்ஸ்டாகிராம் லைவில் வந்த ராஷ்மிகா மந்தனா, ரசிகர்களின் கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளித்தார்.
அவர் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருப்பதாலும், ஐ.பி.எல் போட்டியில் பெங்களுரு அணிக்கு ஆதரவு தெரிவித்திருந்ததாலும், கிரிக்கெட் தொடர்பான கேள்விகளையும் ரசிகர்கள் ராஷ்மிகாவிடம் கேட்டனர். அப்போது, கிரிக்கெட்டில் யார் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ராஷ்மிகா, மகேந்திரசிங் தோனி என்றார். கிரிக்கெட் மைதானத்தில் தோனியின் அணுகுமுறை, பேட்டிங், கேப்டன்சி என அனைத்தையும் தான் ரசிப்பதாகவும், கிரிக்கெட்டுக்கு தேவையான 100 விழுக்காட்டையும் அவர் கொடுப்பதாக புகழ்ந்து தள்ளினார். மேலும், தோனியில் மிகத் தீவிர ரசிகை என்றும் ராஷ்மிகா தெரிவித்தார்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…