Rashmika is the answer to Aishwarya Rajesh
அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ஃபர்ஹானா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு பதிலாக தான் நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.
ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பதிலளித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ”உங்கள் பேட்டியை நன்றாக புரிந்துகொண்டேன். நமக்குள் விளக்கம் அளித்துக்கொள்ள எந்த தேவையுமில்லை என நினைக்கிறேன். உங்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் உண்டு. உங்கள் ‘ஃபர்ஹானா’வுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…