ranam aram thavarel movie review
அடுத்ததுடுத்து நடக்கும் கொலைகளும், அதற்கு பின்னால் நடக்கும் மர்மங்களும் படத்தின் கதை.
கதைக்களம் தனது காதல் மனைவியுடன் காரில் பயணம் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் மனைவி மரணம் அடைய நினைவை இழந்து 2 வருடமாக தவிக்கிறார் நாயகன் வைபவ். மரணம் அடைந்து சிதைந்த உடலை படமாக வரைவதில் திறமை கொண்ட வைபவ் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகள் அவரால் கண்டு பிடிக்கப்பட்டு முடித்து வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் ஆங்காங்கே உடலின் பாகங்கள் கருகிய நிலையில் கிடக்கிறது. இது பற்றிய வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீரென காணாமல் போகிறார்.இதையடுத்து கொலை வழக்கை விசாரணை செய்வதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப் நியமனம் செய்யப்படுகிறார். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது.இறுதியில் மர்ம கொலைகள் செய்தது யார்? எதற்காக செய்தார்? கொலையாளியை வைபவ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்யா ஹோப் கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் வைபவ் உணர்வு பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார். கதைக்கேற்றவாறு ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை கொடுத்துள்ளார். கொலைகளுக்கான பின்னணியை விறுவிறுப்பாக துப்பு துலக்கும் பெண் இன்ஸ்பெக்டராக வரும் தன்யா ஹோப் நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.மகளை இழந்து கதறி அழும் காட்சியில் நந்திதா ஸ்வேதா பரிதாபத்தை உருவாக்கியுள்ளார். சிறிது நேரமே வந்து அழகால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் சரஸ் மேனன்.
கிரைம் திரில்லர் கதையை விறுவிறுப்பான திரைக்கதை கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷெரீப். முதல் பாதி வேகமாகவும், இரண்டாம் பாதியில் கதையின் வேகம் சற்று குறைவது சிறிய பலகீனம்.
கரோலியன் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.”,
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…