ramya-krishnan-viral-post-about-jailer-shooting-spot
இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் தனது 169 வது படத்தை நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ் குமார் ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரவபூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இணைந்து இருக்கிறார். அதனை நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவிட்டு, ‘அன்று படையப்பா, இன்று ஜெய்லர்’ என ஸ்மைலிங் இமோஜுடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…