வெள்ளித் திரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் என முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார்.
தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா. 1993- ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் அறிமுகமானார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்தியா முழுதும் வலம் வந்தார்.
இந்நிலையில், நடிகை ரம்பா ‘அருணாச்சலம்’ படத்தின் ஷூட்டிங்கின் போது ரஜினி செய்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “அருணாச்சலம் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடிகர் ரஜினியை பார்க்க சல்மான் கான், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் வந்திருந்தனர். சல்மான் கான் உடன் ஹீரோயினாக ஒரு சில படங்களில் நடித்துள்ளேன். அதனால் அவரை பார்த்ததும் மும்பையில் வழக்கமாக ஹீரோக்களை பார்த்தால் கட்டிப்பிடிப்பது போன்று கட்டிப்பிடித்தேன்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த் செட்டில் திடீரென டென்ஷன் ஆகிவிட்டார். எல்லோரும் ரஜினியை பார்க்கின்றனர். அப்படியே திரும்பி என்னை பார்க்கின்றனர். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன்பின்னர் ரஜினி செட்டில் இருந்த அனைவரையும் வர சொல்லி ரம்பா, சல்மான்கானுக்கு எப்படி வணக்கம் வைத்தார். நமக்கு எப்படி வணக்கம் வைத்தார் என நடித்து காட்டினார். மேலும், தென்னிந்தியர்கள் எல்லாம் என்ன இளிச்சவாயனுங்களா, உங்க ஆட்களுக்கு மட்டும் கட்டிப்புடிச்சு வணக்கம் வைப்பீங்களா எனக் கேட்டார்.
இன்னொரு நாள் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் மின்விளக்குகள் அணைந்துவிட்டன. அப்போது யாரோ என் முதுகில் தட்டிவிட்டு போனது போல இருந்தது. உடனே கத்திவிட்டேன். லைட் மீண்டும் வந்தவுடன் ரம்பா பின்னாடி தட்டினது யாருடா என ரஜினி சாரே ஒரு பஞ்சாயத்து டிராமா போட்டார். அப்படித்தான் செட்டில் எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பார்” என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…