Categories: NewsTamil News

கமலை தொடர்ந்து பொன்னம்பலத்துக்கு உதவிய ரஜினி

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் பொன்னம்பலம். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனிலும் பங்கேற்றார்.

பொன்னம்பலத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நடிகர்கள் சரத்குமார், கமல்ஹாசன் ஆகியோர் பொன்னம்பலத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்துள்ளனர். இதுதவிர, பொன்னம்பலத்தின் 2 குழந்தைகளின் கல்வி செலவை கமல்ஹாசன் ஏற்றுள்ளார்.

இந்நிலையில் பொன்னம்பலத்தின் மருத்துவ சிகிச்சைக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவ முன்வந்துள்ளார். இதுபற்றி பொன்னம்பலம் தரப்பில் கூறியதாவது: எனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன.

இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். என் மகன், மகள் ஆகியோரின் படிப்பு செலவை கமல் சார் ஏற்றுக்கொண்டார். எனது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செலவை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

Dayangaram Official Teaser

Dayangaram Official Teaser | VJ Siddhu | Siddhu Kumar | Dr. Ishari K Ganesh |…

18 hours ago

O Mysaa Re Lyrical Video

O Mysaa Re Lyrical Video | Mysaa | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy|…

18 hours ago

John Doe Official Trailer

John Doe Official Trailer | Arjun Das, Sanchana Natarajan | Madhumita | Arka Mediaworks |…

18 hours ago

ஜெயிலர் 2 படத்திலிருந்து சந்தானத்தின் காட்சிகள் நீக்கப்பட்டதன் பின்னணி…

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல…

20 hours ago

மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா – தனுஷ் இணையும் புதிய படம்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் முதன்முறையாக ஒரே திரைப்படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர்…

21 hours ago

நவம்பர் 6-ல் தனுஷின் ‘ஓம்’ பட இசை வெளியீட்டு விழா… சென்னையில் பிரம்மாண்ட ஏற்பாடு!

நடிகர் தனுஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓம் - சாப்டர் 1: உதிரம் - தி பிளட் வுட்’…

21 hours ago