கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் அனைத்து கடைகளையும் திறந்து வைக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
குறித்த நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்திருந்தாக செல்போன் உரிமையாளர்களான ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களை அடித்தே கொன்றனர்.
இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இதுவரை மௌனம் காத்துவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது எனக் கூறியுள்ளார்.
மேலும் #சத்தியமாவிடவேகூடாது என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த டேக் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]