Rajini plans to act in 2 films
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், நடிகர் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி ரஜினியின் 169-வது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ரஜினியின் 170-வது படத்தை நடிகர் தனுஷ் இயக்க இருப்பதாகவும், இப்படத்தை ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Toxic Official Tamil Teaser , Rocking Star Yash ,Geetu Mohandas , KVN , Monster Mind…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா…
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…