விசா வாங்க தான் கல்யாணமே பண்ணினேன் – ரஜினி பட நடிகை சர்ச்சை பேச்சு

தமிழில் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன் ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார்.

இந்தியில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கும் இவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார். இயக்குனர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ராதிகா ஆப்தேவும் இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனடிக்ட் டெய்லரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். கொரோனாவுக்கு முன்பு லண்டன் சென்றிருந்த அவர் தற்போது அங்கேயே தங்கி உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது ராதிகா ஆப்தேவிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் பேசும்போது, “எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கையில்லை. விசா பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது. லண்டனை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விசா எளிதாக கிடைத்துவிடும் என்று அறிந்தேன்.

அதனால் தான் திருமணம் செய்தேன். ஆனாலும் இது நியாயமற்ற செயல் தான்” என்றார். ராதிகா ஆப்தேவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Suresh

Recent Posts

Senjudare Lyrical Video

Senjudare Lyrical Video | OM | Sreeleela | Dhanush | Sai Pallavi | Mammootty |…

2 days ago

Sakkarai Penne Lyrical Video

Sakkarai Penne Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Praveen | Sam CS

2 days ago

Adra Parama Lyrical Video

Adra Parama Lyrical Video | Raawadi | Basil Joseph | LK Akshay Kumar | Jen…

2 days ago

Iruvar Lyrical Video

Iruvar Lyrical Video | Nivas K Prasanna, Aditi Shankar | Vijay Sethupathi | Kumaran

2 days ago

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில்…

2 days ago

சந்தானத்தின் ‘லவ் பைட்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு…

2 days ago