rajarani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் புதிய பைக் உடன் வரும் அதே இடம் பைக் வாங்க ஏது பணம் என சிவகாமி கேட்க எனக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சு தனி குடித்தனம் ஆயிடுச்சு, இன்னமும் என்ன வந்து கேள்வி கேட்டுட்டு இருக்காதீங்க. எல்லாத்துக்கும் கண்ணு தண்ணி விட்டு டிராமா பண்ணாதீங்க என சொல்லி உள்ளே செல்ல சிவகாமி அழுது புலம்புகிறார்.
உடனே ரவி, செந்தில் என எல்லோரும் ஓடிவந்து ஆதியை கேள்வி கேட்க ஜெசி அவர்களிடம் ஆதியை மன்னிப்பு கேட்டு சொல்ல ஆதி மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என சொல்லிவிட்டு செல்கிறார். அடுத்து சரவணன் குடும்பத்தை கெடுக்க நினைத்து மரியாதையை இழந்த கருணாகரன் பரந்தாமனை சந்திக்க வந்து இந்த தேர்தலில் சரவணனை தோற்கடிக்க நான் எல்லாவிதமான உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என சொல்கிறார்.
அடுத்து கருணாகரன் செந்திலுக்கு ஆதரவு தருவது போல ஊரெல்லாம் பேனர் வைக்க அதை பார்த்த சரவணன் குழுவினர் சரவணன் அழைத்துச் சென்று காட்ட அவர் செந்திலிடம் பேசுவதாக கூறுகிறார்.
அதன் பிறகு கௌரி மேடம் அடுத்ததாக நடக்க போகும் போட்டி படகு போட்டியை விட மிகவும் ஆபத்தான ஒன்று என கூறுகிறார். வனவிலங்குகள் நிறைந்த காட்டுக்குள் ட்ரெக்கிங் செல்ல வேண்டும். மேலும் அங்கு சமூக விரோதிகள் நிறைய பேர் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் உங்களை தாக்கம் உட்படலாம் அதை எல்லாம் தாண்டி நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும் என கூறுகிறார்.
இன்னொரு பக்கம் பரந்தாமன் அர்ச்சனாவில் சந்தித்து செந்திலை ஜெயிக்க வைத்து சரவணன் மண்ணை கவ்வ வைக்க நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என சொல்லி கலப்பட எண்ணெயை சரவணன் கடையில் வைக்குமாறு சொல்லி கூறுகிறார். அர்ச்சனா உன் செந்தில ஜெயிக்க வைக்க இதை நான் செய்து முடிக்கிறேன் என உறுதி கொடுக்கிறார்.
அதன் பிறகு சரவணன் செந்திலை தனியாக அழைத்து சந்தித்து கருணாகரன் ஆதரவு உனக்கு தேவையா என கேட்க தானா போய் ஆதரவு கேட்கல அவர் பரந்தாமன் அண்ணனோட நண்பர் என்பதால் அவராக வந்து ஆதரவு தருவதாக சொன்னார் என சொல்ல அவன் ஆதரவுலதான் நீ ஜெயிக்கணுமா என சரவணன் கேட்கிறார். உடனே செந்தில் இப்போ புரியுது உனக்கு இந்த தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று பயம் வந்துருச்சு அதான் என்கிட்ட வந்து இப்படி பேசிட்டு இருக்க என செந்தில் சொல்ல சரவணன் ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…