rajarani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சிவகாமி கோவிலில் உட்கார்ந்து சந்தியா ஜெயிக்கும் வரை பச்சை தண்ணி கூட குடிக்க மாட்டேன் என அடம்பிடிக்க சரவணன் சமாதானம் செய்ய முயற்சி செய்ய முடியாமல் போகிறது. பிறகு திடீரென மழை கொட்ட கொட்டு மழையிலும் சிவகாமி அசையாமல் அப்படியே இருக்கிறார்.
இன்னொரு பக்கம் சந்தியா ப்ராக்டிசுக்கு தயாராக கௌரி மேடம் அனைவரையும் அழைத்து இந்த போட்டியில் கலந்து கொள்ள இப்போது மைனஸ் பாயிண்ட் இருப்பதை சொல்கிறார். கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் விலகிக் கொள்ளலாம் என சொல்ல அப்துல் சந்தியா விலகி கொள்வார் என எதிர்பார்க்க அது நடக்காமல் போகிறது.
அடுத்து சரவணன் டாக்டர் வரவைத்து சிவகாமியை பரிசோதனை செய்ய அவர் உடனடியாக வீட்டுக்கு கூட்டிட்டு போய் சாப்பிட வையுங்க இல்லனா எது வேணாலும் நடக்கலாம் என எச்சரிக்கை செல்கிறார். உடனே சரவணன் சந்தியாவுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்ல சந்தியா கண்கலங்கி அழுகிறார். அப்போது ஊர் மக்கள் சிலர் போனை வாங்கி சந்தியாவுக்கு வாழ்த்து கூறி ஜெயிக்க சொல்கின்றனர். சந்தியா ஊர் மக்களுக்காகவும் அத்தைக்காகவும் கண்டிப்பாக நான் ஜெயிப்பேன் என கண்ணீருடன் கூறுகிறார்.
சரவணன் அடுத்த ஃபோன் கால் நீங்க ஜெயிச்சிட்டீங்கன்னு தான் இருக்கணும். ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் நீங்க என்னுடைய நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க என கூறுகிறார். அடுத்து சந்தியா போட்டி நடக்கும் இடத்திற்கு செல்ல அங்கு ஜோதியுடன் விளையாட அப்துல் சந்தியாவை நக்கல் அடித்து பேச எதுவாக இருந்தாலும் போட்டி முடிந்து பேசலாம் என பதிலடி கொடுக்கிறார் சந்தியா. அடுத்து போட்டி தொடங்க சரவணன் ஜோதியை வீடியோ கால் பண்ண சொல்லி அம்மாவிடம் காட்ட அவர் சந்தியா ஜெயிக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…