கோவிலில் மயங்கி விழுந்த சிவகாமி.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பார்வதி கல்யாண பத்திரிக்கை வைத்து பூஜை செய்ய குடும்பத்தார் கோவிலுக்கு சென்று உள்ளனர். அப்போது விக்கி பார்வதிக்கு போன் செய்ய பதற்றத்துடன் போனை எடுக்கிறார் பார்வதி. ஒருநாள் தன்னுடன் தங்க வேண்டும் என மீண்டும் பார்வதியை மிரட்டுகிறார் விக்கி. இல்லையென்றால் போட்டோக்களை உன் பாஸ்கரின் அம்மாவிடம் காட்டி விடுவேன் என மிரட்டுகிறார். பிறகு சந்தியா என்ன ஏது என கேட்க எதுவும் சொல்லாமல் பாரதி மறைத்து விடுகிறார்.

குடும்பத்திற்கு நிறைய கண் திருஸ்டி இருக்கு யாரும் நீ சொல் பேச்சு கேட்பது இல்லை. பெரிய பிரச்சனை வரப் போகுது. உன் பூர்வ ஜென்ம புண்ணியம் தான் உங்களைக் காக்கும் என்னை மட்டும் நம்பு என கூறுகிறது.

இதனால் பார்வதி அர்ச்சனா என அனைவரும் வருகின்றனர். சிவகாமி கண்கலங்கி அழுது மயங்கி விழுகிறார். பிறகு வீட்டுக்கு வந்ததும் சந்தியா எல்லோருக்கும் ஆறுதல் சொல்ல அர்ச்சனா எனக்கு என்னவோ அந்த பெண்மணி சாமியாடி சொன்னது நடந்ததுடுமோனு தோணுது என கூறுகிறார். சிவகாமி பார்வதி தைரியமான பொண்ணு அப்படித்தான் நான் வளர்த்து இருக்கேன் என கூறுகிறார்.

பிறகு சிவகாமியின் அவருடைய கணவரும் கல்யாணத்துக்கு என்னென்ன தேவை எவ்வளவு செலவு இருக்கு என கணக்குப் போட்டு இண்டிகேட்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என சொல்ல சரவணன் 4 லட்சம் ரூபாய் கொடுத்து விடுகிறேன். மீதியை புரட்டி விடலாம் என சொல்கிறார். உடனே செந்தில் 5 லட்சம் தரேன் என் தங்கச்சிக்கு செய்யாமல் வேற யாருக்கு செய்யப் போகிறேன் என கூறுகிறார். அர்ச்சனா ஏன் இப்படி காச வாரி இறைக்கறீங்க என சொல்ல செந்தில் அவரை திட்டி விடுகிறார்.

அதன் பிறகு சரவணனின் அப்பா சொத்து பணத்தை சேர்க்கல ஆனால் ரெண்டு மாணிக்கத்தை சேர்த்து வைத்திருக்கிறேன் என கண் கலங்குகிறார். சிவகாமி இந்த நிமிஷம் எங்க உண்மை போனாலும் கவலை இல்லை இந்த குடும்பத்தை நீங்க பாத்துப்பீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. இந்த கல்யாணத்த நல்ல படியா நடத்திடுவேனு எனக்கு தைரியம் வந்துடிச்சி என கூறுகிறார். பிறகு மறுநாள் காலையில் எல்லோரும் துணிக் கடைக்குச் செல்ல பார்வதியை தனியாக அழைத்துச் சென்று அவரை மிரட்டுகிறார் விக்கி. தயவுசெய்து இங்கிருந்து போய்விடு என கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறார் பார்வதி. இந்த நேரத்தில் சிவகாமி பார்வதி யாரையோ பார்த்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கே வருகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani2 Serial Episode Update 26.04.22
jothika lakshu

Recent Posts

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

1 hour ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

1 hour ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

3 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

3 hours ago

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…

3 hours ago