raja rani2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஜெஸ்ஸியின் அப்பா அம்மா வந்திருக்க சிவகாமி குடும்பத்தார் எல்லோரும் ஜெசி என் புள்ள தான் அவ வயித்துல வளர பிள்ளைக்கு காரணம்னு சொல்றான் இது எந்த விதத்தில் நியாயம்? என கேட்க ஜெஸ்ஸி உறுதியாக ஆதி தான் காரணம் என சொல்கிறார். இதனால் அவருடைய பெற்றோர்கள் ஒரு பொண்ணு இப்படி வந்து சொல்ல மாட்டான். ஆதியும் ஜெசியும் காதலிச்ச விஷயம் எனக்கும் தெரியும் ஜெசி என்கிட்ட சொல்லி இருக்கா என ஜெஸ்ஸியின் அப்பா கூறுகிறார்.
ஆதி உண்மையை சொல்லு என ஜெஸ்ஸியின் அப்பா கேட்க திரும்பவும் எல்லோரும் பதில் சொல்ல சொல்லி ஆதியை எச்சரிக்க அது சத்தியமா எனக்கு தெரியாது, அவ வயித்துல வளர குழந்தைக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி விடுகிறான். இதனால் ஜெசி உட்பட அனைவரும் அதிர்ச்சடைகின்றனர். பிறகு உங்க பொண்ண கூட்டிட்டு வெளியே போங்க என சிவகாமி சொல்ல வெளியே போகத்தான் போறோம் இங்கேயே இருக்க போறது இல்ல.
எனக்கு இந்த சமுதாயத்தில் செல்வாக்கு எல்லாம் இருக்கு அடுத்து என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் இந்த விஷயத்தை நான் சட்ட ரீதியா பாத்துக்குறேன் என சொல்ல சிவகாமி பாருங்க பாருங்க எங்க பக்கம் தான் உண்மை இருக்கு என கூறுகிறார். பிறகு இவர்கள் வீட்டை விட்டு கிளம்ப மீண்டும் வீட்டில் உள்ள எல்லோரும் ஆதியிடம் இது பற்றி கேட்க ஆதி சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது என கூறி விடுகிறான்.
அதன் பிறகு சந்தியாவும் சரவணனும் இதைப் பற்றி பேச சந்தியா ஆதி மீது சந்தேகம் இருப்பது போல சொல்ல சரவணன் கோபப்படுகிறான். ஜெசி பொய் சொல்ல மாட்டா அதுவும் இல்லாம இத்தனை பேர் முன்னாடி அவ்வளவு உறுதியா அதுதான் காரணம் என சொல்லும் போது நாம கொஞ்சம் யோசிக்கணும் என கூறுகிறார். ஆனால் சரவணன் எனக்கு ஆகிய 20 வருஷமா தெரியும் என் தம்பி தப்பு பண்ணி இருக்க மாட்டான் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். அதன்பிறகு சந்தியா இவருக்கு அண்ணன் தம்பி பாசம் கண்ணை மறைக்கிறது இரண்டு பக்கமும் ஆராயனும் இரண்டு பக்கமும் விசாரிக்கணும். ஆதியும் அர்ச்சனாவும் கொடுத்த ரியாக்ஷன் சரியில்லை. ஆதாரத்தோடு பேசுவோம் என சந்தியா ஆதாரத்தை திரட்ட முடிவெடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…
One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…
Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India