Raja Rani2 Serial Episode Update 16.03.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட்டில் சரவணன் ஏடிஎம் கார்டை திருடிய அர்ச்சனா ஏடிஎம் சென்டருக்கு சென்று பல எண்களை போட்டு கடைசியில் ஒரு வழியாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து விடுகிறார்.
இந்த பக்கம் சந்தியா கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த அப்போதும் அந்த சரவணன் அப்பா அம்மாவிடம் கூறிவிட்டு உள்ளே சென்று சந்தியாவிடம் பேசுகிறார். இந்த நேரத்தில் அவர் தெரியாமல் சூடு வைத்துக் கொள்ள அவருக்கு உதவி செய்துவிட்டு கடைக்கு கிளம்புகிறார் சரவணன்.
ஏற்கனவே குடோனில் சர்க்கரை மற்றும் மயிலு ஆகியோர் நாடகத்திற்காக ஒத்திகை பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சரவணன் இங்கு வந்து கோவலன் கண்ணகி கதையில் நடிக்க போவதாக கூறுகிறார். சரவணன் கோவலனாகவும் மயிலு கண்ணகியாகவும் சக்கரை பாண்டிய மன்னனாகவும் நடிக்கிறார். இவர்கள் இந்தப் பக்கம் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க சரவணன் அப்பாவிடம் சரவணன் கேட்ட நாடக சாமான்களை எடுத்து வந்து கொடுத்தார் ஒருவர்.
பிறகு சரவணன் இவர்களை அழைத்துக்கொண்டு குடோனுக்கு வர அந்த பொருட்களை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைக்கிறார் சரவணன். சரவணனின் அப்பாவே எனக்கும் ஒரு வேடம் வேண்டும் இல்லை என்றால் சிவகாமியிடம் சொல்லிவிடுவேன் என கூற எமதர்மன் காசு போடுவீர்களா என்று கேட்கிறார் சரவணன். சரவணன் அப்பாவை ஓகே கண்ணு ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சிவகாமி உள்ளே வந்து விட என்ன தெரியலையா இடத்தில் இருந்த அவருடைய கணவரை பார்த்து மயங்கி மயங்கி விழுகிறார்.
பிறகு சரவணன் சிவகாமியை வீட்டிற்கு அழைத்து சென்று படுக்க வைத்து தண்ணீர் தெளித்து எழுப்புகிறார். மயக்கம் தெளிந்து எழுந்த சிவகாமி யமதர்ம ராஜாவை பார்த்ததாகச் சொல்லி அலறுகிறார். சரவணன் அதெல்லாம் ஒன்றுமில்லை பயப்படாதீங்க நீங்க இந்த குடோன் பக்கம் வராதீர்கள் என்று கூறுகிறார். பிறகு ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி விட்டு மீண்டும் குடோனுக்கு வருகிறார் சரவணன்.
மீண்டும் இவர்கள் ஒத்திகையை தொடங்கும் இந்த நேரத்தில் சந்தேகத்துடன் சந்தியா இங்கே வருகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…