சிவகாமியிடம் வசமாக சிக்கிய அர்ச்சனா.. உண்மையை உடைத்த போலீஸ்.. ராஜா ராணி 2 எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டில் சரவணனை காணவில்லை என அனைவரும் பதறிப்போய் காத்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சரவணன் அர்ச்சனா மற்றும் செந்திலுடன் ஆட்டோவில் வந்து இறங்குகிறார். எல்லோரும் நைட்டு யார்கிட்டயும் எதுவும் சொல்லாமல் எங்கடா போயிருந்த எல்லாரும் பயந்து போய் விட்டோம் என கூறுகின்றனர். சிவகாமி அர்ச்சனாவுடன் அம்மாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போய் இருந்தியா எனக் கேட்க சரவணன் அமைதியாகவே இருக்கிறார்.

அதன் பின்னர் செந்தில் நீயாவது சொல்லேன் சரவணனை எங்க பார்த்த எப்படி நீங்க ஒண்ணா வந்தீங்க என கேட்கிறார்? அர்ச்சனாவிடம் இந்த அம்மாவுக்கு எப்படியிருக்கு என கேட்க என் அம்மாவுக்கு நெஞ்சுவலி என மீண்டும் உளறுகிறார். பிறகு சரவணன் எல்லாத்தையும் நான் பொறுமையா சொல்றேன் கொஞ்ச நேரம் இருங்க என சொல்லிவிட்டு செந்தில் அர்ச்சனாவை ரூமுக்கு அனுப்பி வைக்கிறார்.

பிறகு நீங்க சொன்ன மாதிரி நான் ஹாஸ்பிடலுக்கு தான் போயிருந்தேன். ஆனா இந்த அர்ச்சனாவும் செந்திலும் இல்லை. உங்ககிட்ட சொல்லாம கல்யாண நாள் கொண்டாட்டத்துக்காக குத்தாலம் போயிருக்காங்க. அதைத் தெரிந்து தான் நான் அங்க போய் அவங்கள கூட்டிட்டு வந்தேன். நீங்க சொன்ன அனுப்ப மாட்டீர்கள் என்ற பயத்தில அவை இப்படி பண்ணிட்டாங்க இந்த பேச்சை இதோட விட்டுடுங்க என சொல்லி அனைவரையும் அமைதிப்படுத்தினார் சரவணன்.

இதனைத் தொடர்ந்து ஒருவழியாக வீட்டில் அனைவரும் அமைதியான நிலையில் போலீஸ் வீட்டிற்கு வருகிறது. இதனால் சந்தியா அர்ச்சனா விஷயம் சொல்லத்தான் போறாங்களோ என ஒருபக்கம் பதறுகிறார். ஆதி பணத்தை திருடியது நான்தான் என தெரிந்து விட்டதா வசமாக சிக்கிட்டோம் என அவர் ஒரு பக்கம் பயப்படுகிறார். சரவணன் லாட்ஜ் விஷயத்தை சொல்லத்தான் வராங்களோ என ஒருபக்கம் பயப்படுகிறார்.

வீட்டிற்கு வந்த போலீஸ் சந்தியாவை பார்க்க வந்தேன் என சொல்ல உடனே சரி வாங்க ரூமுக்கு போய் பார்க்கலாம் என சந்தியா அழைத்துச் செல்கிறார். ஆனால் சிவகாமி ரூமிற்குப் போய் போலீசிடம் பேச என்ன இருக்கிறது எதுவாக இருந்தாலும் இங்கேயே சொல்லட்டும் என தடுத்து நிறுத்துகிறார். சந்தியா என்ன வந்து பார்த்தாங்க என போலீஸ் சொல்ல என்ன கம்ளைண்ட் கொடுத்தாளா? நாங்க வேணாம்னு சொல்றீங்க இப்படி பண்ணிருக்கா என சிவகாமி கோபப்படுகிறார். சரவணன் நான் தான் வேணாம்னு சொன்னேன்ல எதுக்கு இப்படி பண்ணீங்க என ஒரு பக்கம் சத்தம் போடுகிறார்.

அவங்க ரொம்ப நாளைக்கு முன்னாடி என்ன பார்த்தாங்க. ஒரு வருஷத்துக்கு முன்னாடி சிவகாமி என்பவரை குடும்ப வன்முறை கேசில் கைது பண்ணாங்க. அந்த கம்ளைண்ட் கொடுத்தது யார் என்று கண்டுபிடிக்க சொன்னாங்க. அதை கண்டுபிடித்து விட்டோம் சொல்லிட்டு போல தான் வந்தேன் என கூறுகிறார் போலீஸ். சந்தியா வேண்டாம் சொல்லாதீங்க என சைகை காட்ட சரவணன் சொல்லுங்க அது யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சாகணும் என கேட்கிறார். பேரு பிரியா எனத் தொடங்கி முகவரியோடு மொத்த விவரத்தையும் சொல்கிறார் போலீஸ்.

சரவணனின் அப்பா இது அர்ச்சனாவின் வீட்டு முகவரி என சொல்ல பிரியா என்பது அர்ச்சனா அண்ணியோட தங்கச்சி என பார்வதி சொல்கிறார். பிறகு போலீஸ் அங்கிருந்து கிளம்பிவிட சிவகாமி அர்ச்சனாவை இந்த வேலையை பார்த்தது என அதிர்ச்சியாகி அப்படியே கீழே உட்காருகிறார். வீட்டுக்குள்ள வே இருந்துகிட்டே என்ன வேலையெல்லாம் பார்த்திருக்க இதைப்போய் நான் யார் கிட்ட சொல்லி புலம்புவேன் என அழுகிறார். சரவணன் அர்ச்சனா என்ன வேலையெல்லாம் பண்ணி இருக்கா என கோபப்படுகிறார்.

பார்வதி அர்ச்சனா அண்ணி அப்போ அவங்க அம்மாவுக்கு நெஞ்சுவலினு சொல்லிட்டு போனது கூட உண்மையாக இருக்காது என சத்தம் போடுகிறார். பொய் சொல்லிட்டுத்தான் குற்றாலம் போயிருப்பாங்க என சொல்ல ஆதி சொன்னா நீங்க எல்லாத்தையும் பழி சொல்லாத என சொன்ன அர்ச்சனா செய்த வேலைகள் அனைத்தையும் பார்வதி நினைவுபடுத்துகிறார். அவருடைய அப்பா கம்ப்ளெயிண்ட் குடுத்துட்டு நல்லவ மாதிரி வந்து ஸ்டேஷன்ல நாடகம் போட்டா என அழுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் சரவணன் செந்திலை போட்டு அடிப்பது மட்டுமல்லாமல் அர்ச்சனாவை அடிக்க பாய்கிறார்.


Raja Rani2 serial Episode Update 07.02.22
jothika lakshu

Recent Posts

Lenin Pandiyan Official Trailer

Lenin Pandiyan Official Trailer | Isaignani Ilaiyaraaja | Gangai Amaran | Roja | Dhaarshan Ganesan

5 hours ago

வெயிலில் தாகம் தீர்க்கும் சேவை – சேரன், அதுல்யா ரவி முன்னிலையில் நீர் மோர் பந்தல் தொடக்கம்

கோடை வெப்பம் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் பாதசாரிகளின் தாகத்தை தணிக்க, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் சிறப்பான…

5 hours ago

கிரிக்கெட் வீரராக ஜி.வி. பிரகாஷ்!

நடிகரும் இசையமைப்பாளருமான G. V. Prakash Kumar, புதிய திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக மாறவுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக…

5 hours ago

‘கருப்பு’ படத்தின் ‘ராத்து ராசன்’ பாடல் வெளியீடு

இயக்குநர் R. J. Balaji இயக்கத்தில் Suriya நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படம் தொடர்ந்து அப்டேட்களால் கவனம் ஈர்த்து…

5 hours ago

மகளுக்குப் பெயர் சூட்டிய ஹரிஷ் கல்யாண்!

தமிழ் திரையுலகில் முன்னேறி வரும் நடிகர்களில் ஒருவரான Harish Kalyan, தனது குடும்பத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.…

5 hours ago

‘ஹாய்’ படத்தின் முதல் பாடல் அப்டேட்

தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவரான Kavin, தனது புதிய படம் ‘ஹாய்’ மூலம் மீண்டும்…

6 hours ago