அர்ச்சனாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. சந்தியாவிடம் உளறிய அர்ச்சனாவின் தங்கை

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் சரியாக அர்ச்சனாவின் தங்கச்சியை பார்க்கிறார் சந்தியா. சந்தியாவை பார்த்த ப்ரியா உடனே அக்கா எப்படி இருக்கீங்க பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது என சொல்கிறார். நான் நல்லா இருக்கேன் நீயும் நல்லா இருக்கேன்னு பார்க்கும்போதே தெரியுது என சந்தியா கூறுகிறார்.

பிறகு இந்தப் பக்கமா வந்தேன் அதான் அத்தை மாமாவை பார்த்து அம்மா பத்தி சொல்லிட்டுப் போகலாம்னு வீட்டுக்கு போயிட்டு வரேன் என கூறுகிறார். ‌ எந்த ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கீங்கன்னு சொன்னீங்க என சந்தியா யோசிக்க ஆர்எஸ் ஹாஸ்பிடல் என பிரியா கூறுகிறார். அதன்பிறகு நல்லா இருக்கவங்கள ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கீங்க என சந்தியா சொல்ல பிரியா அதிர்ச்சி அடைகிறாள்.

உடனே அங்கிருந்து கிளம்பி ஆகணும் அவர் நைசாக எஸ்கேப் ஆக அவரை பிடித்து நிற்க வைக்கிறார் சந்தியா. எங்க அத்தை மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தது யாருன்னு தெரிஞ்சிடுச்சு அவங்க பேரு பிரியா. அந்தப் பிரியா நீ தானே என பிரியாவின் மெயில் ஐடியை கூறி மேலும் அதிர்ச்சி கொடுக்கிறார். அக்கா எனக்கு எதுவும் தெரியாது என நீங்க சிக்கவைக்க பார்க்கிறீர்கள் என பிரியா கூறுகிறார்.

போலீஸ் வந்து கைது பண்ணிட்டு போகப் போறாங்க என சொல்ல பயந்து போய் உண்மைகளை உளறி விடுகிறான் பிரியா. அக்காவும் அம்மாவும் சொல்லி தான் செஞ்சேன் எனக்கு வேற எதுவும் தெரியாது என விட்டுடுங்க எனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு என கூறுகிறார். துருவித் துருவி சந்தியா கேள்வி கேட்க எதுவாக இருந்தாலும் குற்றாலத்திற்கு போய் இருக்க எங்க அக்கா வந்ததும் கேட்டுக்கங்க என அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்த பக்கம் செந்திலும் அர்ச்சனாவின் தங்கியிருக்கும் லாட்ஜுக்குள் போலீஸ் புகுந்து விடுகிறது. ஒவ்வொரு அறையாக சென்று உள்ளே இருப்பவர்களை கைது செய்து வருகின்றனர். அர்ச்சனாவும் செந்திலும் அப்போதுதான் ரொமான்ஸ் செய்ய தொடங்குகின்றனர்.

இந்த பக்கம் வீட்டுக்கு வந்த சந்தியாவிடம் சிவகாமி போன வேலை நல்லபடியா முடிஞ்சதா எனக்கேட்க அவர் அதிர்ச்சி அடைகிறார். சரவணன் சொன்னதால் முழுசா முடிஞ்சிடுச்சா என கேட்க அவர் என்ன சொல்லி சமாளித்தார் என தெரியாமல் சந்தியா திருதிருவென இருக்கிறார். இந்த நேரத்தில் சரவணன் கரெக்டாக வீட்டிற்கு வந்து சந்தியாவை காப்பாற்றி விடுகிறார்.

அதன்பிறகு சந்தியா அர்ச்சனா இதுவரை செய்த தில்லுமுல்லு வேலைகள் அனைத்தையும் நினைத்து பார்க்கிறார். நேரா அர்ச்சனாவிற்கு பேசுறதா இல்ல இந்த பிரச்சனையே வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்றதா என யோசிக்கிறார் சந்தியா. எது பண்ணாலும் அதுல ஒரு சிக்கல் இருக்கு என யோசித்துக் கொண்டிருக்க இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.


Raja Rani2 Serial Episode Update 02.02.22
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

3 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

3 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

3 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

3 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

3 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

4 days ago