raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் விக்கி செல்வத்தை ஜெயிலில் இருந்து தப்பிக்க வைத்து சந்தியா மற்றும் பார்வதி கொலை செய்யச் சொல்லி அனுப்பி வைக்கிறார். செல்வமும் ஜெயிலில் இருந்து தப்பித்து வந்து சந்தியா வீட்டு முன்னாடி நின்று இனி உன்னை சந்தோஷமாக வாழ விடமாட்டேன் என கூறுகிறார்.
மறுநாள் காலையில் சந்தியாவை பேட்டி எடுக்க டிவி பத்திரிகையாளர்கள் என ஒட்டுமொத்த மீடியாவும் வீட்டின் வெளியே நிற்க சந்தியா பேட்டியளிக்கிறார். உங்களுடைய அடுத்த டார்கெட் போலீசாவது தானா என கேள்வி கேட்க சிவகாமி அனைவரையும் திட்டி அனுப்பி வைக்கிறார்.
அதன்பிறகு சந்தியாவை அழைத்து இந்த போலீசார் நடத்துற நிகழ்ச்சிக்கு நீ போகக்கூடாது. அது எனக்கு நல்லதா படல என கூறுகிறார். ஆனால் இதை சரவணனிடம் என்னால் நேரடியாக சொல்ல முடியாது அவன் என்னை தவறாக நினைத்து விடுவான். ஆகையால் நீயே அவளிடம் சொல்வது போல சொல்லி இந்த நிகழ்ச்சிக்கு போகாமல் தடுத்து நிறுத்தி விடு என கூறுகிறார்.
இந்த குடும்பத்துக்கு எது நல்லதுனு படுதோ அதை செய் யோசிச்சு பாரு என கூறி சந்தியாவை மென்டல் டார்ச்சர் செய்கிறார். இதனால் சந்தியா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…