raja rani 2 serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியாவிடம் ஹால் டிக்கெட் கொடுத்து நீ போலீஸ் ஆவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறுகிறார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை நான் சொன்ன மாதிரி உன்னுடைய போலீஸ் வேலையால இந்த குடும்பத்திற்கோ சரவணனுக்கோ எந்த பிரச்சனையும் வரக்கூடாது. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்தால் அடுத்த நிமிஷமே அந்த போலீஸ் வேலையை விட்டுவிட்டு இந்த வீட்டோட மருமகளா இருக்கணும் என கூறுகிறார்.
சிவகாமி சந்தியா போலீசாக அனுமதி கொடுத்ததை தொடர்ந்து அனைவரும் உற்சாகமாக இருந்த நிலையில் சிவகாமியின் நிபந்தனையால் அதிர்ச்சடைகின்றனர். அதன் பிறகு யோசித்த சந்தியா நான் உங்களது நிபந்தனைகளுக்கு சம்மதிக்கிறேன் என கூறுகிறார்.
அதன் பிறகு எல்லோருக்கும் பால் பாயாசம் செய்து வைத்திருக்கிறேன் என சொல்லி சாப்பிட அழைத்துச் செல்கிறார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் சரவணனுக்கு ஃபோன் கால் ஒன்று வருகிறது. நடக்க இருக்கும் வியாபாரிகள் சங்கம் மாநாட்டிற்காக சரவணன் உடனே கிளம்பி மதுரைக்கு வர சொல்கின்றனர்.
இந்த விஷயத்தை சரவணன் வீட்டில் சொல்ல சந்தியா நீங்க போயிட்டு வாங்க. இந்த மாதிரி மாநாடுகளில் கலந்து கொள்ளும்போது நிறைய பேருடைய அனுபவங்களை தெரிந்து கொள்ள முடியும் என கூறுகிறார். சிவகாமி சந்தியாவை நாங்க பரீட்சைக்கு அழைச்சிட்டு போக மாட்டோம் நீ போய் உன்னுடைய வேலையை பாரு என கூறுகிறார். பின்னர் சரவணனும் மதுரைக்கு கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…