raja rani 2 serial episode update
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் எல்லோரையும் நிற்க வைத்து பேசும் சிவகாமி சந்தியாவிடம் சில கேள்விகளை கேட்க வேண்டும் என சொல்லி நீ வேலைக்கு போயிட்டா சரவணனை யாரு பார்த்துக்கறது? ஒரு நல்ல நாள்ல உன்னால எல்லோரிடமும் சேர்ந்து இருக்க முடியுமா அதுக்கு எல்லாம் லீவு கிடைக்குமா? நினைச்ச நேரத்துக்கு உன்னால குடும்பத்தோடு சேர்ந்து கோவிலுக்கு வர முடியுமா? அங்க நிறைய ஆம்பளைங்க தான் வேலை செய்வாங்க அவங்களுக்கு மத்தியில உன்னால வேலை செய்ய முடியுமா உனக்கு வேற பிரச்சனைகளை நீ தான் சமாளிக்கணும் அதெல்லாம் உனக்கு தேவைதானா? என சந்தியா வேலைக்கு போகக்கூடாது என்ற கோணத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார்.
சந்தியா சரவணன் செந்தில் என எல்லோரும் சந்தியாவுக்கு ஆதரவாக பேச அதை எல்லாம் சிவகாமி காதில் வாங்குவதாக இல்லை. என்னுடைய வேலைகளை நானே பார்த்துப்பேன் என சரவணன் சொல்ல அதையும் கேட்பதாக இல்லை. இடையில் அர்ச்சனா வேற பாயிண்ட்டா பிடிச்சு பேசுறீங்க கேளுங்க போலீஸ் வேலைக்கு போனா கைத்த புடிச்சு ஏறணும், கம்பியை புடிச்சு தொங்கணும் கிரவுண்ட்ல ஓடு ஓடுனு ஓடணும். அப்படி இருக்கும்போது குழந்தை எப்படி பிறக்கும்? பிறக்காமலே கூட போயிடலாம் என எடுத்துக் கொடுக்கிறார்.
மேலும் இன்னும் ஏன் நீங்க குழந்தை பெத்துக்காம இருக்கீங்க போலீஸ் வேலைக்கு போகணும்னு தள்ளி போட்டு இருக்கியா? அதுக்கு பதில் சொல்லு என அர்ச்சனா பிரச்சனையை ஊதி பெருசாக்குகிறார். பிறகு சிவகாமி சரி சந்தியா வேலைக்கு போகணுமா வேண்டாமா என்பது குறித்து என்னுடைய முடிவை நாளைக்கு சொல்றேன் அதுவரைக்கும் இதை பத்தி யாரும் என்கிட்ட பேசக்கூடாது என சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.
DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran |…
Vadhandhi Season 2 Official Trailer | M. Sasikumar, Anagha Maruthora, Yashwanth, Aparna Das, Revathy.S, Vivek…
Pachapulla Video Song | Hi | Nayanthara, Kavin | Sathya Narayanan | Jen Martin |…
I'M GAME Official Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films
Wedding Bells Video Song | Anbe Diana | Pari Elavazhagan | Ramya Ranganathan | Bharath…
Daiva Coatingu Video Song | Vadhandhi Season 2 | Sasikumar | Simon K.King | Yashwanth…