Raja Rani 2 Serial Episode Update 22.02.22
சரவணன் சந்தியாவின் அண்ணன் வீட்டில் அமர்ந்து கொண்டிருந்த போது அவருடைய அன்னையார் சந்தியாவை பற்றி விசாரிக்க சந்தியா வந்த பிறகு எங்க குடும்பமே மாறிடுச்சு. எங்களோட குடும்பத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போய் விட்டார் எனப் பாராட்டி பேசுகிறார்.
அதன் பிறகு வீட்டிற்கு ஒருவர் வந்து போட்டோ பிரேம் ஒன்றை கொடுக்கிறார். சந்தியாவின் அப்பா அம்மாவின் போட்டோவை பிரேம் போட கொடுத்திருந்தனர். அது தான் இது சொல்கிறார். இதுவரை சந்தியாவின் அப்பா அம்மாவை பார்த்தாலே சரவணன் போட்டோவை பிரித்து பார்க்கலாம் என யோசிக்கிறார். அதன்பிறகு வேண்டாம் ஏதாவது தப்பா நினைக்கப் போகிறார்கள் என அமைதியாக இருந்து விடுகிறார். ஆனாலும் அவரை ஏதோ உறுத்திக்கொண்டே இருக்க நான் இந்த வீட்டு மாப்பிள்ளை, பிரிச்சு பார்க்கிறதுல என்ன தப்பு என அதனை பிரித்து பார்க்கிறார்.
போட்டோவை பிரித்துப் பார்த்த சரவணன் அதிர்ச்சி அடைகிறார். தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பில் சரவணன் இருவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அந்த இருவர்தான் சந்தியாவின் அப்பா அம்மா என தற்போது அவருக்கு தெரிய வருகிறது. பிறகு அந்த போட்டோவை சந்தியாவிடம் கொடுத்துவிட்டு சிவகாமி போன் பண்ணவே வீட்டிற்கு வருகிறார்.
வீட்டிற்கு வந்த சரவணன் தன்னுடைய அப்பாவை தனியாக அழைத்துச் சென்று நடந்த விஷயங்களை கூறுகிறார். அதேபோல் அவருடைய அப்பா சரவணனுக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் நடக்காமல் நின்று போன போது பத்திரிக்கையில் பெயர் மாறி சந்தியா என பதிவாகியிருந்ததை சுட்டிக்காட்டுகிறார். உனக்கும் சந்தியாவுக்கு மீது பூர்வ பந்தம் இருக்கு அதனால் தான் நீங்க இருவரும் ஒன்று சேர்ந்து இருக்கிறீர்கள். அவளுடைய ஆசை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை நிறைவேற்று என கூறுகிறார்.
இந்த பக்கம் வீட்டில் சந்தியா குழந்தைக்கு துணி எடுத்துட்டு வரணும்னு நினைச்சேன் அதுக்குள்ள நீங்க வந்துட்டிங்க என சொல்ல அதுக்கு என்ன உங்க கடைக்கு போய்ட்டு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு எடுத்துக்க வேண்டியதுதான் என அவருடைய அண்ணி சொல்ல பிறகு சந்தியா அர்ச்சனா செய்த வேலைகள் பற்றி அவர்களிடம் கூறுகிறார்.
அதன்பிறகு சந்தியா அங்கிருந்து வீட்டிற்கு கிளம்புகிறார். கடையில் சரவணன் சந்தியாவின் அப்பா அம்மா பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அப்பா இறுதியாக சரவணன் கையில் எஸ் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பேனாவை கொடுத்ததை நினைத்து பார்க்கிறார். இப்பதான் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…
Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…