சந்தியாவை திட்டிய சிவகாமி. சந்தியாவிடம் சவால் விடும் அர்ச்சனா.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அனைவரும் சாப்பிட உட்கார அப்போது சந்தியா சப்பாத்தியை யூடியூபில் பார்த்து செய்தேன் என செய்த விதத்தை சொல்ல சிவகாமி எடுப்பார்கள் என சொல்ல சப்பாத்தி எடுத்துக் கொடுக்க அவரே வியந்து போகிறார். ஆமாம் சப்பாத்தி சாப்டாக இருக்கு என சந்தியாவை பாராட்டுகிறார். அதன்பிறகு குருமாவை எடுத்து எல்லோருக்கும் ஊற்ற வாயில் வைத்த அனைவரும் உப்பு கறிப்பதால் முகம் மாறுகிறது.

உடனே எல்லோரும் உப்பு அதிகமாக இருக்கு எனக்கல்ல சந்தியா நான் சமைச்சு முடித்துவிட்டு டேஸ்ட் பார்த்து தான் எடுத்து வந்து வைத்தேன். ஆனால் அப்போது உப்பு அதிகமாக இல்லை என சொல்ல உடனே அர்ச்சனா நீதான் எதையுமே ஆதாரம் இருந்தால் தான் நம்புவ நீ ஏன் டேஸ்ட் பண்ணிட்டு சொல்லு என கூறுகிறார். சந்தியாவும் அதை டேஸ்ட் செய்து விட்டு உப்பு அதிகமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். சிவகாமி உனக்கு சமைக்கத் தெரியாது தெரியாது ன்னு சொல்லணும் அத விட்டுட்டு இப்படி சாப்பாட்ட கெடுத்து வைக்கக் கூடாது. நாலு பேரு பாராட்டியதும் உனக்கு தல காலு புரியல என திட்டுகிறார்.

பிறகு சந்தியா ரூமுக்குள் நான் சமைக்கும் போது அவ்வளவு உப்பு இல்லை அந்த உப்பு எப்படி வந்ததுன்னு தெரியலை என சொன்ன சரவணன் தெரியாம போட்டிருக்கீங்க சமைக்கும் போது இதெல்லாம் சாதாரணம் தான். அம்மா திட்ட எதையும் மனசுல வெச்சுக்கோங்க நாளைக்கு அவங்க சரி ஆகி விடுவாங்க என ஆறுதல் கூறுகிறார் சரவணன்.

இந்தப் பக்கம் அர்ச்சனா நடந்ததை எண்ணி சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்க அப்போது செந்தில் வந்து இதெல்லாம் உன்னோட வேலை தானா என சத்தம் போடுகிறார். உடனே அர்ச்சனா இந்த வீட்டில் எது நடந்தாலும் அதற்கு நான் தான் காரணம் என சத்தமிட நீ பண்ணி வச்ச வேலை எப்படி இந்த வீட்டுல யார் வேணாலும் உன்னை நம்பலாம் ஆனால் இனிமேல் நான் நம்ப மாட்டேன் என கூறுகிறார். எல்லாத்துக்கும் காரணம் அந்த சந்தியாவை தான் என திரும்பவும் சந்தியாவை வம்புக்கு இழுக்கிறார். இப்பவும் பழியை தூக்கி அவங்க மேலே போடத்தான் பார்க்கிற என அர்ச்சனாவை திட்டுகிறார் செந்தில்.

மறுநாள் காலையில் சிவகாமி வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க அப்போது அந்த வழியாக வந்த பக்கத்து வீட்டு பெண்மணி சரவணன் கடையில ஒரே கூட்டம் போல பணம் காசு வந்ததும் என் மருமவ என் பையன் மாதிரி தனிக்குடித்தனம் கூட்டிட்டு போய்ட்டா, பார்த்து இருந்துக்கோ சிவகாமி பின்னாடி வருத்தப்படாத என சொல்லிவிட்டு செல்கிறார்.

பிறகு சிவகாமி குளிப்பதற்காக புடவை எடுக்க புடவை கிழிந்து போய் இருப்பதை பார்த்து சந்தியாவை கூப்பிட்டு திட்டுகிறார். கிழியற அளவுக்கா புடவைய வைக்க முடியாதுன்னு முகத்துக்கு நேரா முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே என கூறுகிறார். ‌ அத்தை துவைக்கும் போதும் காயப்படும் போது மடித்து வைக்கும் போது அப்படி இல்லை என சொல்கிறார். அப்போ அத்தையே கிழிச்சிட்டாங்கனு சொல்றியா என அர்ச்சனா சொல்ல பார்வதி திசை திருப்பி விடாதீர்கள் என திட்டுகிறார்.

அது துவைக்கும் போது கிழிந்த மாதிரி தெரியல கத்தரிக்கோல் வைத்து கிழிச்ச மாதிரி இருக்கு என பார்வதி சொல்ல நீ என்னை அதையே சொல்லிட்டு இருக்க என அர்ச்சனா பேச்சை மாற்ற முயற்சி செய்கிறார். மேலும் சிவகாமி துவைக்கும் போது கிழிந்து விட்டது என்று வந்து சொல்ல வேண்டியது தானே. அத விட்டுட்டு என் கிட்ட இருந்து இந்த விஷயத்தை மறைச்சு இருக்க, பொய் சொல்றதுக்கு ஒன்னும் எனக்கு புதுசு இல்லையே இந்த வீட்டுக்குள்ளவே நீ பொய் சொல்லிதானே வந்த என திட்டி விட்டு சிவகாமி இந்த புடவையை தூக்கி எறிந்து விட்டு குப்பையில் போடு என கூறியவாறு உள்ளே செல்கிறார்.

சந்தியா இது எப்படி நடந்தது எனக்கு தெரியாமல் முழித்துக்கொண்டு கண் கலங்குகிறார். இதனையடுத்து வெளியான ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனா முகத்துக்கு நேராக உன்னை எனக்கு பிடிக்கல. இந்த புடவையை கிழிச்சது நான்தான் குருமா உள்ள உப்பைப் போட்டதும் நான்தான். இந்த வீட்ல ஒன்னு நீ இருக்கணும் இல்லன்னா நான் இருக்கணும் என பேசுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.


Raja Rani 2 Serial Episode Update 16.02.22
jothika lakshu

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

10 hours ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

10 hours ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

10 hours ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

11 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

11 hours ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

11 hours ago