பார்வதியை மிரட்டும் விக்கி.. சிவகாமியிடம் சந்தியாவை கோர்த்து விட்ட அர்ச்சனா.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அர்ச்சனா விக்கிக்கு போன் செய்து பார்வதியாக கல்யாணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என சொல்ல அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார். உடனே அடுத்த நாள் அன்னைக்கு நீயும் பார்வதியும் சேர்ந்து இருக்கிற ஃபோட்டோ கேட்டல அது இப்போ என்கிட்ட இருக்கு. அத வச்சி என்ன பண்ண முடியுமோ அந்த போட்டோவை அனுப்பி வைக்கிறார். போட்டோவை பார்த்த விக்கி இனி பார்வதிக்கு தூக்கம் கிடையாது. நான் நிம்மதியாக தூங்குவேன் என்று சந்தோஷப்படுகிறார். உடனே அந்த போட்டோக்களை பார்வதிக்கு அனுப்பி வைக்கிறார்.

போட்டோக்களை பார்த்த பார்வதி அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கிறார். மறுநாள் காலையில் சிவகாமி காய்கறிகளை வாங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டு பெண்மணி ஒருவர் வந்து சந்தியா நீங்கள் ஏன் கர்ப்பம் ஆகவில்லை என கோர்த்து விடுகிறார். படிச்ச புள்ளைங்க குழந்தை வேண்டாம் என தள்ளி போட்டுகொண்டு இருக்கிறாங்க, அப்படி ஏதும் திட்டத்தில் இருக்கிறார்களா என கேட்கிறார். அந்த கதையெல்லாம் உனக்கு எதற்கு என சத்தம் போட்டுவிட்டு உள்ளே வருகிறார் சிவகாமி.

எனக்கு அம்மாவை எப்படியாவது சந்தியா படிப்பதைப் பற்றி சொல்லிவிட வேண்டும் என முடிவு செய்கிறார் சரவணன். இந்த நேரத்தில் அர்ச்சனா சந்தியா இன்னும் கர்ப்பமாகாதது பற்றி அவரும் கோர்த்து விடுகிறார். சந்தியா போலீஸ் ஆகுற ஆசை இல்லைன்னு சொன்னாலும் அவர்களுக்குத் தெரியாமல் ஏதோ பண்ணிக்கிட்டு இருக்கானு எனக்கு தோணுது. நாலு சுவத்துக்குள்ள சரவணனை கிட்ட நெருங்க விடுறதே இல்லை போல என கூறுகிறார். சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் நீங்களே இதை எப்படியாவது கண்டுபிடித்துக்கோங்க என கூறுகிறார்.

அதன் பின்னர் பார்வதி சந்தியாவை அழைத்து விக்கி போட்டோவை அனுப்பி மிரட்டுவதை பற்றி சந்தியாவிடம் சொல்லி வருத்தப்படுகிறார். இந்த போட்டோக்களை தப்பா எதுவுமே இல்லை அப்படி இருக்கும்போது நீ எதற்கு பயப்படுகிற? பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. நீ பயப்படாத மாதிரி தெரிஞ்சா அது அவங்களுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த மாதிரி. அந்தத் தப்பை மட்டும் ஒருபோதும் பண்ணாத. இந்த விஷயத்தை உங்க அண்ணா கிட்ட சொல்லி விடலாம் என சொன்ன பார்வதி வேண்டாம் அண்ணா ஏற்கனவே அவன் மேல பயங்கர கோபத்தில் இருக்கு. அதனாலதான் அண்ணன் மேல பொய் கேஸ் போட்டு பொலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போனான் என பார்வதி சொல்கிறார். அப்படின்னா நான் சொல்லுறதை மட்டும் செய் என சந்தியா திரும்பவும் விக்கி போன் பண்ண உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என தைரியமா பேசிட்டு போனை கட் பண்ணிடு என சொல்ல அதனால பிரச்சினை எதுவும் வராது என பார்வதி கேட்கிறார். நான் சொன்னது நீ செய் பிரச்சினை வராம நான் பாத்துக்குறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 13.04.22
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago