raja rani 2 serial episode update
டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோட்டில் சந்தியாவும் சரவணனும் ஊஞ்சலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க அப்போது வந்த சிவகாமி உடனே 2 பேரும் குற்றாலத்திற்கு போயிட்டு ஒரு ரெண்டு மூணு நாள் இருந்துட்டு வாங்க என சொல்ல மறுநாள் சந்தியாவிற்கு டெஸ்ட் இருப்பதால் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
சரவணன் உடனே எதுக்கு எனக் கேட்க நீங்க எங்கேயும் வெளியே போகிறதில்லை போயிட்டு சந்தோஷமா இருந்துட்டு வாங்க என கூறுகிறார். இப்பவே கிளம்புங்க என சொல்ல சந்தியா சரி என கூறுகிறார். பிறகு இப்போ என்ன பண்ணுறது என சந்தியா கேட்க சரவணன் அம்மாவிடம் நான் பேசி சமாளிக்கிறேன் என சொல்லிவிட்டு சென்று கடையில் யாரும் இல்லை ஆடர் வேற இருக்கு. இந்த சமயத்தில் கதையை அப்படியே விட்டு விட்டு செல்ல முடியாது. பக்கத்துல இருக்க குற்றாலத்திற்கு எப்ப வேணாலும் போய்க்கலாம் என கூறுகிறார்.
இவர்கள் ஹனிமூன் விஷயம் குறித்து கேட்டதும் அர்ச்சனா அதிர்ச்சியாகி வரும் இவர்களை போக விடாமல் தடுக்க சில வேலைகளை செய்ய சரவணன் இதை பயன்படுத்திக் கொள்கிறார். சிவகாமியும் உங்களோட இஸ்டம் என சொல்லி விடுகிறார். ஆனால் இதற்கெல்லாம் சந்தியா தான் காரணம் என சிவகாமி வழக்கம்போல் தவறாக புரிந்து கொள்கிறார்.
அதன்பிறகு சந்தியாவும் சரவணனும் ஓரிடத்தில் அமர்ந்து ஒருவரையொருவர் மாற்றி புகழ்ந்து கொள்கின்றனர். பிறகு சந்தியா கிளாசுக்கு போக அவரை அனைவரும் பாராட்டி வரவேற்கின்றனர். அதன் பின்னர் கிளாஸில் ஜெஸ்ஸி என்ற பெண் புதிதாக வந்து சேர்கிறார். அவர் டைம் பாஸ்க்காக வந்ததாகச் சொல்ல சந்தியா அவருக்கு சில டிப்ஸ் கொடுக்கிறார். இத்துடன் ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…