பார்வதி திருமணத்தை நிறுத்திய விக்கிக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் விக்கி பார்வதியுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை தூக்கி வீச அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு எல்லோருக்கும் ஒரு குட்டி கதை சொல்கிறேன் என விக்கி பார்வதியை சந்தித்து காதலித்த விஷயங்களை சொல்கிறார். அர்ச்சனா அவரது பங்கிற்கு சந்தியா எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டே யார்கிட்டயும் எதையும் சொல்லாமல் மறைத்துவிட்டார். இந்த விஷயத்தை ஏற்கனவே சொல்லி இருந்தா பாஸ்கர் குடும்பத்தாரிடம் சொல்லி அவங்க கால்ல கைல விழுந்தாவது இந்த கல்யாணத்தை நடத்தி இருக்கலாம் ஆனா இப்போ கல்யாணம் நின்னு போச்சு என பேசுகிறார்.

சிவகாமி இதெல்லாம் உனக்கு முன்னாடியே தெரியும் என கேட்க சந்தியாவும் ஆமாம் என கூறுகிறார். பார்வதி இந்த போட்டோ எல்லாம் உண்மையா என கேட்க அவரும் ஆமாம் என சொல்கிறார். பிறகு பாஸ்கரின் அம்மா விக்கி பேசிக்கொண்டிருக்கும்போதே பளார் என அறைந்து நீ இப்படி எல்லாம் பண்ணுவன்னு ஏற்கனவே தெரியும். சந்தியா என்ன முன்னாடியே சந்தித்து எல்லா விஷயத்தையும் சொல்லிட்டா. ‌ இன்னும் நூறு போட்டோ வீடியோ எடுத்துட்டு வா என்ன வேணா பண்ணு ஆனா என் வீட்டில் மருமக பார்வதி தான் என சொல்ல பார்வதியின் குடும்பத்தார் மகிழ்ச்சி அடைகின்றனர் அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார்.

உன்னுடைய உருட்டல் மிரட்டலுக்கு பயப்படுற ஆள் நாங்க கிடையாது என்று சொல்கிறார். சந்தியா என் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் இந்த விஷயத்தை எதையுமே மறைக்கல எல்லாத்தையும் என்னிடம் சொல்லி இருக்கா. அப்பவே என்னுடைய மருமகள் பார்வதி தான் என்பதில் நான் இன்னும் உறுதி ஆகி விட்டேன் என கூறுகிறார். பிறகு சந்தியா உங்க எல்லாருக்கும் நான் ஒரு விஷயம் சொல்றேன் இந்த காலத்தில் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் வருவது மிகவும் சகஜம். ஆனால் இருவருக்கும் ஒத்துப் போகாது என வரும்போது பிரேக்கப் செய்து கொள்வதில் தவறில்லை எனக் கூறுகிறார். இப்படி யாராவது போட்டோ வீடியோக்களை வைத்து மிரட்டினால் பயப்பட வேண்டாம் அவர்களுக்கு அடிபணிய வேண்டாம் இதையெல்லாம் நாளைக்கு உங்களது வீட்டிலும் உங்களது பெண் பிள்ளைகளுக்கும் நடக்கலாம் அப்படி ஒரு வேலை நடந்தால் அவர்களுக்கு ஆதரவாக இருங்கள் எனக் கூறுகிறார்.

இதுபோன்ற மிரட்டல்களுக்கு பிறகும் உங்கள் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைய நாம் அதற்கு உதாரணம் பார்வதி திருமணம் தான் என சொல்கிறார். இந்த விஷயத்தை புரிந்து கொண்டேன் பார்வதியை ஏத்துக்கிட்ட பாஸ்கர் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு நான் நன்றி சொல்கிறேன் என கூறுகிறார்.

பிறகு பாஸ்கர் இந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும் ஆனா இவன் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து வரும் நான் எதிர்பார்க்கல என சொல்கிறார். என்கிட்ட இந்த விஷயத்தை மறைத்த என சிவகாமி கேட்க உங்ககிட்ட சொன்னா உங்க கோவம் முழுக்க பார்வதி மேல தான் போகும் அதனால தான் இதை நானே டீல் செய்தேன் என கூறுகிறார். இவன் சும்மாவே விடக்கூடாது என செந்தில் சரவணன் அடிக்கச் செல்ல அவனை அடிக்க வேண்டாம் அவங்க வீட்ல இருந்து வர சொல்லி இருக்கேன் என கூறுகிறார் சந்தியா. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 08.05.22

‌‌ ‌‌

jothika lakshu

Recent Posts

முத்து சொன்ன வார்த்தை,விஜயா சொன்ன பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை ரோகிணி திட்டி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில்…

1 hour ago

அண்ணாமலை சொன்ன வார்த்தை, நந்தினி சொன்ன பதில் வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

வாட்டர் மெலன் அகாடமி டாஸ்க்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

3 hours ago

மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

மஞ்சள் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…

17 hours ago

இட்லி கடை : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தின் 7 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

24 hours ago

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவர்…

1 day ago