Raja Rani 2 Serial Episode Update 08.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சந்தியா படிக்கும் கொச்சின் காட்சி இருக்கும் அனைவரும் சரவணனை கைத்தட்டி பாராட்டுகின்றனர். உங்கள மாதிரி ஒருவர் புருஷனாக கிடைத்த சந்தியா கொடுத்து வைத்திருக்க வேண்டும் என சொல்கின்றனர். எனக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லையேன்னு வருத்தமா இருக்கு என ஒரு பெண் சொல்ல அதுக்கு என்னங்க உங்க எல்லாருக்கும் நான் அண்ணன் மாதிரி தான் என கூறுகிறார் சரவணன். பிறகு நீங்க எல்லாரும் ஒரு நாள் என்னோட ஸ்பீட் கடைக்கு வர வேண்டும் என சரவணன் அழைப்பு வைக்கிறார்.
மறுநாள் காலையில் சந்தியா தன் அப்பா அம்மாவின் போட்டோவை பார்த்து கொண்டே கடவுள் உங்களை பிரித்துக்கொண்டு சரவணனை என்னிடம் கொடுத்து இருக்கிறார். அவர் எனக்கு கிடைக்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என கூறுகிறார். பிறகு சரவணன் அங்கு வர அவரிடம் சந்தியா அத்தைக்கு கோச்சிங் கிளாஸ் போற விஷயம் தெரிந்தால் என்ன ஆகும் அவங்க முதல்ல குழந்தையை பெற்றுக் கொடு என சொல்வாங்க. அப்படி சொன்னா அதுக்கு ஒரு ஐடியா வச்சிருக்கேன் ஒரு நிமிஷம் என வீட்டிற்குள் போன சரவணன் வயிற்றில் துணியை வைத்துக் கொண்டு கர்ப்பமாக இருப்பது போல வந்திருக்கிறார். இப்படி துணியை வைத்து ஏமாற்றி விடலாம் சரவணன் சொல்ல பத்து மாதம் ஆனது பிறகு துணி மூட்டையையா பெத்து கொடுக்க முடியும் என சந்தியா கேட்கிறார். உண்மைய சொல்லுங்க உங்களுக்கு குழந்தை பெத்துக்க ஆசை இல்லையா எனக் கேட்க சரவணன் இருக்கு ஆனா இல்லை எனக் கூறுகிறார்.
இப்படி சொல்லாதீங்க கரெக்ட்டா சொல்லுங்க என சந்தியா கேட்க இருக்கு ஆனா இப்போ பெத்துக்க ஆசை இல்லை என கூறுகிறார். அதன்பிறகு கடையில் அர்ச்சனா செந்திலுக்கு தெரியாமல் மந்திரத்தை சொல்லி சாமியார் கொடுத்த மருந்தை சாப்பிடுகிறார். அதன்பிறகு மருந்து தீர்ந்து விட்டது இன்னொரு முறை சாமியாரை சென்று பார்த்து மருந்து வாங்க வேண்டும் என அர்ச்சனா முடிவு செய்கிறார். அதற்காக செந்திலிடம் பொய் சொல்லிவிட்டு சாமியாரை பார்க்க செல்கிறார்.
அர்ச்சனா மீது சந்தேகப்பட்ட செந்தில் அவரை பின்தொடர்ந்து தலையில் கோணிப்பை மாட்டிக் கொண்டு செல்கிறார். யாரோ தன்னைப் பின் தொடர்வதை கவனித்த அர்ச்சனா திருடன் என நினைத்து செந்திலை பிடித்து பொதுமக்களிடம் ஒப்படைத்து விடுகிறார். எல்லோரும் செந்திலை தர்ம அடி அடிக்கின்றனர். பிறகு அது புருஷன் என தெரிந்ததும் அர்ச்சனா எல்லோரையும் போக சொல்லி செந்திலிடம் மன்னிப்பு கேட்கிறார்.
உனக்கு அந்த சாமியார் கிட்ட என்ன வேலை? அவரை எதுக்காக நீ பாக்க போற என செந்தில் கேட்க எல்லாம் ஆம்பள குழந்தை பிறக்கும்னு தான் என அர்ச்சனா கூறுகிறார். இதைக்கேட்டு அர்ச்சனாவை திட்டுகிறார் செந்தில். அதன்பிறகு சாப்பிட்டியா என்ன கேட்க இல்ல பசிக்குது என அர்ச்சனா சொல்ல சரி வா ஹோட்டல்ல போய் சாப்பிடலாம் என ஹோட்டலுக்கு செல்கின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…