Raja Rani 2 Serial Episode Update 08.02.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அர்ச்சனா செய்த வேலைகள் அனைத்தும் சரவணனுக்கு தெரியவர இனிமேலும் நான் அமைதியாக இருக்க மாட்டேன் என்று செந்தில் அர்ச்சனாவை அழைக்க செல்கிறார் சரவணன். அவரை சந்தியாவும் அவருடைய அப்பாவின் தடுத்து நிறுத்துகின்றனர். கொஞ்சம் பொறுமையா இருங்க குடும்பம் உடைந்துவிடும். அவசரப்படாதீர்கள் தப்பு பண்ணவங்க தண்டனை அனுபவிச்சு ஆகணும் என சந்தியா சொல்ல சரவணன் என்னை எதுக்கு இழுக்கறீங்க என கோபப்படுகிறார்.
பிறகு சிவகாமி எல்லோரும் அமைதியாக விடுங்க இத நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி சரவணனை உள்ளே செல்ல சொல்கிறார். அதன்பிறகு சிவகாமி பார்வதியை அர்ச்சனா செந்திலை கூப்பிடு என சொல்லி அனுப்புகிறார். பிறகு பார்வதி கதவைத் தட்ட இருவரும் பயந்து போகின்றனர்.
செந்தில் கதவை திறந்ததும் அம்மா கூப்பிடுறாங்க என பார்வதி சொன்னதும் இருவரும் வந்து நிற்கின்றனர். பிறகு செந்திலிடம் உங்க மாமியாருக்கு இப்போ எப்படி இருக்கு எதுவும் சொல்லாம உள்ள போயிட்டீங்களே அது தான் கூப்பிட்டேன் என சொல்கிறார். செந்தில் அமைதியாகவே இருக்க அர்ச்சனாவிடம் கேட்கிறார் சிவகாமி. அர்ச்சனா இன்னமும் அம்மா சீரியஸா தான் இருக்காங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க. அம்மாவுக்கு இப்படி ஆயிடுச்சேன்னு அப்பா மயக்கம் போட்டு கீழே விழுந்து அங்க இருந்த இரும்புல இடிச்சுகிட்டு மண்டை உடைஞ்சு போச்சு.
ஹாஸ்பிடல் ஃபுல்லா ரத்தம் நான் தான் ரெண்டு பாட்டில் ரத்தம் கொடுத்தேன் என கூறுகிறார். அம்மா அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பதறிப் போய் ஓடி ரெண்டு பாட்டில் ரத்தம் கொடுத்து வந்திருக்கா. இவதான் நல்ல மகள் எனக்கு கிடைத்த நல்ல மருமகள் என சிவகாமி புகழ்கிறார். நீ ஏண்டா சரியில்லை அமைதியா இருக்க உனக்கு எதுக்கு முகம் இப்படி இருக்கு என சிவகாமி கேட்க உண்மையை சொல்ல முற்படுகிறார் செந்தில். உடனே அர்ச்சனா அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்துகிறார். சரி எல்லோரும் கிளம்பி எங்க போய்ட்டு ஹாஸ்பிடல்ல பார்த்துட்டு வந்துடலாம் என சிவகாமி சொல்ல அர்ச்சனா வேண்டாம் யாரையும் உள்ளே விட மாட்டாங்க நீங்க ரெண்டு தடுப்பூசி போடல என அர்ச்சனா செல்கிறார்.
உடனே சரவணன் நானும் சந்தியாவும் இரண்டு தடுப்பூசி போட்டு விட்டோம் நாங்க வரோம் நீங்க வெளிய இருங்க நாங்க போய் பார்த்துட்டு வரோம் என சொல்கிறார். இல்ல அவங்க இப்போ ஹாஸ்பிடல் இல்ல வீட்டுக்கு போய்ட்டாங்க என உடனே அர்ச்சனா பேச்சை மாற்ற அப்போ எல்லோரும் போகலாம் என சிவகாமி சொல்கிறார். பிறகு சிவகாமி செந்திலை தரதரவென இழுத்துச் சென்று பூஜை ரூம் அருகே நிற்க வைத்து கற்பூரம் அடித்து அர்ச்சனா சொல்வதெல்லாம் உண்மை என சத்தியம் செய்யச் சொல்கிறார்.
செந்தில் தயக்கத்தோடு நிற்க நீ இந்த வீட்டு புள்ளதான் உடம்பில் ஓடுவது எங்க ரத்தம் ன்னு சத்தியம் பண்ணு என சிவகாமி சொல்ல அர்ச்சனாவிடம் அம்மாவுக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னதெல்லாம் பொய் என கூறி மன்னிப்பு கேட்கிறார். நான் எவ்வளவோ சொன்னேன் வேண்டாம்னு இவ தான் கேட்கல வேற வழி இல்லாமத்தான் இப்படி பண்ணிட்டேன் என சொல்கிறார். என்ன ஜெயிலுக்கு அனுப்பி அது அர்ச்சனா தான் என்ற விஷயம் உனக்கு தெரியுமா எனக் கேட்க சத்தியமா எனக்கு தெரியாது என செந்தில் சொல்கிறார். நீங்க என்ன சொல்றீங்க இதெல்லாம் எனக்கு தெரியாது என செந்தில் சொல்ல அவருடைய அப்பா பொய் சொல்லாத என கன்னத்தில் அறை விடுகிறார்.
திரும்பத் திரும்ப செந்தில் எனக்கு தெரியாது என கேட்க சரவணன் அடிக்கப் பார்க்கிறார். சிவகாமி சரவணனுக்கு இரண்டு அறை விட்டு நான் தான் பேசிட்டு இருக்கேன் இல்ல அமைதியா நில்லு என கூறுகிறார். அர்ச்சனா அமைதியாகவே இருக்க செந்தில் எனக்கு அப்பவே சந்தேகம் வந்தது ஆனால் அர்ச்சனாவுக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதால் நான் அதை அப்படியே விட்டு விட்டேன் என கூறுகிறார். ஆனா அவ தங்கச்சி பிரியாவுக்கு தெரியுமே என சிவகாமி சொல்ல செந்தில் அதிர்ச்சி அடைந்தேன் அம்மா சொல்றதெல்லாம் உண்மையா என கேட்கிறார்.
சொல்லு அர்ச்சனா எதுக்கு வாயை மூடிட்டு இருக்க என சிவகாமி கேட்க எல்லாமே பொய்.. இது எல்லாத்துக்கும் காரணம் இந்த சந்தியா தான் என சந்தியாவை இந்த பிரச்சனையில் இழுத்துவிட கடுப்பான சரவணன் அவரை செருப்பால அடிக்க பாய்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…