Raja Rani 2 Serial Episode Update 04.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியாவும் சரவணனும் கிளாஸ் முடிந்ததும் வீட்டுக்கு திரும்பிய போது சந்தியா கிளாஸில் தன்னை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்ததை பதிலடி கொடுத்ததை பற்றி கூறுகிறார். அப்படியே இருவரும் பேசிக் கொண்டே வீடு வந்த போது ரோட்டில் கொட்டி கிடந்த எண்ணெயில் வழுக்கி கீழே விழுந்து விடுகின்றனர்.
அதன் பின்னர் தங்களை போல யாரும் விபத்தில் சிக்க கூடாது என எண்ணெய் கொட்டிய இடத்தில் மண் அள்ளி போடுகின்றனர். இந்த நேரத்தில் அந்த வழியாக வந்த இருவர் இவர்களின் நல்ல மனசை பாராட்டுகிறார்கள். இவர்கள் செய்த வேலையை வீடியோ எடுத்து கொள்கின்றனர்.
வீட்டுக்கு போனதும் சந்தியாவுக்கு அடிபட்ட இடத்தில் எண்ணெய் தேய்த்து விடுகிறார் சரவணன். மறுநாள் காலையில் எல்லோரும் அமர்ந்து கொண்டிருந்த போது சரவணன் புதியதாக ஒரு ஸ்வீட் செய்ததாக சொல்லி அதனை எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் மயிலு இருவரின் துணியும் எண்ணெய் கரையாக இருப்பதை எடுத்து வந்து காட்டுகிறார்.
இந்த நேரத்தில் பேப்பரில் இவர்கள் செய்த செயல் குறித்து செய்தி வெளியாகி இருப்பதையும் போட்டு கொடுக்கிறார் ஆதி. கூடவே அர்ச்சனாவும் அவர் பங்குக்கு கோர்த்து விட சிவகாமி இருவரையும் திட்டுகிறார். சரவணன் பொய் சொல்லி சமாளிக்க சிவகாமி அது பொய் என்று கண்டு பிடித்து விடுகிறார். உங்களுக்காக சொல்லணும்னு தோணும் போது சொல்லுங்க என கூறுகிறார். அர்ச்சனா இருவரும் படத்துக்கு போய் வந்ததாக கொளுத்தி போடுகிறார். நாங்களும் ஸ்வீட் கொடுத்து படத்துக்கு போய்ட்டு வரோம் என கூறுகிறார்.
இதனால் அர்ச்சனாவை திட்டி விட்டு உள்ளே சென்று விடுகிறார் சிவகாமி. இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…