Raghava Lawrence Set to Enter Politics
நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக முன்பே தெரிவித்திருந்தார். இதனால் அவரது அறிவிப்பு குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், தனது எக்ஸ் தளப் பதிவில், “எதிர்பார்ப்புகள் இன்றி உங்கள் கடமையை நேர்மையாக செய்யுங்கள். உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை. நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் சமூகத்திற்கு இன்னும் பரந்த அளவில் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே என்னை இந்த பாதைக்கு அழைத்து வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று வெளியாகும் காணொளியில் அரசியல் குறித்த தனது புரிதல், அது தனது வாழ்க்கையில் எவ்வாறு வந்தது, தனது தாயாரின் பார்வை மற்றும் தனது பயணத்தை வடிவமைத்த முக்கிய சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளதாகவும், அதை முழுமையாக பார்த்து கருத்துக்களை பகிருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராகவா லாரன்ஸின் இந்த பதிவு, அவர் அரசியலில் ஈடுபடவுள்ளதாக மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாக, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter… pic.twitter.com/VwPFjdaUqy
— Raghava Lawrence (@offl_Lawrence) June 12, 2026
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…