raghava-lawrence latest video-goes-viral
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். சிறந்த நடிகர் என்று மட்டுமல்லாமல் சிறந்த மனிதர் என்றும் மக்களிடம் பெயர் எடுத்தவர். இவர் பிரபலமாக இருந்த காலத்தில் விஜய், சூர்யா ஆகியோரின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து உதவி செய்துள்ளார். விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால், இந்த படம் இவருக்கு நினைத்த அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.இந்நிலையில், சண்முக பாண்டியன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயார் என நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
அதில், \”விஜயகாந்த் கதாநாயகர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பைட் பண்ணிருக்கிறார். பாடல் பண்ணிருக்கிறார். அடுத்தவர்களை வளர்த்துவிடுவதில் மிகவும் சந்தோஷப்படுபவர். நானும் அவருடன் ‘கண்ணுபட போகுதயா’ படத்தில் மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு கொரியோகிராஃப் செய்திருக்கிறேன். ரொம்ப அழகாக ஆடியிருப்பார். என்னை நிறையவே ஊக்கப்படுத்தியிருக்கிறார். இவ்வளவு உதவி செய்த மனிதனுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். நாம் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம் விஜயகாந்த் அண்ணன் மீது, அந்த அன்பை அவரது மகன் படத்தின் ரிலீஸின் போது அதற்கு ஒரு நல்ல ஓபனிங் கொடுக்க வேண்டும். அதற்கு எவ்வளவு பப்ளிசிட்டி முடியுமோ அதை நான் செய்வேன்.
அந்த படக்குழுவினர் சம்மதித்தால் அந்த படத்தில் நான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயாராகவுள்ளேன். விஜயகாந்த் எத்தனையோ கதாநாயகர்களை வளர்த்துவிட்டிருக்கிறார். அவர் மகன் வளர்வதை நாம் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சண்முக பாண்டியன் தம்பியும் நானும் நடிப்பது போன்று கதை இருந்தால் சொல்லுங்கள்\” என்று பேசினார்.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…